காக்கா முட்டை திரைப்படத்தின் இணை எழுத்தாளராக பணியாற்றிய ஆனந்த் அண்ணாமலை முதல் முறையாக இயக்குனராக அறிமுகமாகும் திரைப்படம் 'காகங்கள்'. கிஷோர், லிஜோமோல், விதார்த், குரு சோமசுந்தரம் மற்றும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும் ஒரு சுவாரஸ்சியமான தகவல் என்னவென்றால் இப்படத்தில் காகங்கள் ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றன.
முதல் தயாரிப்பு :
’மாயவரம் பிக்சர்ஸ்’ நிறுவனத்தின் முதல் தயாரிப்பான இப்படம், வெவ்வேறு நம்பிக்கைகளோடு வாழும் மனிதர்கள், எப்படி காகங்களோடு ஒன்றோடு ஒன்று இணைகிறார்கள், ஒருவரின் வாழ்வு எப்படி மற்றொருவரின் வாழ்க்கையோடு இணைந்து தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை பற்றி கூறுவதுவதாக அமைந்திருக்கிறதாம். எம் .எஸ்.கிருஷ்ணா இசையமைக்கும் இப்படத்தின் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார் சரவணன் இளவரசு.
காகங்களும் நமது கலாச்சாரமும் :
பறவைகளிலேயே மிகுந்த பரிணாம வளர்ச்சி அடைந்த பறவைகளாக கருதப்படுவது காகங்கள். ஒவ்வொரு கலாச்சாரமும் காகங்களுக்கு வெவ்வேறு விதமான தனித்துவத்தை வழங்குகின்றன. இந்து மதம் சனிபகவானின் ரூபமாக காகங்களை கருதுகின்றனர்;
ஒரு சிலர் அவற்றை மூத்த தலைமுறையினரின் ரூபங்களாக பார்க்கிறார்கள். எல்லா நாட்டிலும் காணப்படும் காகங்கள் நம்பிக்கையின் சின்னமாக விளங்குகின்றன; எனவே காகங்கள் திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரமாக அல்லது பல கதாபாத்திரங்களை இணைக்கும் ஒரு பாத்திரமாக அமைகிறது.
பொங்கலுக்கு தொடங்கும் படப்பிடிப்பு :
ஸ்ரீதரன் என்ற கதாபத்திரத்தில் கிஷோர், அற்புதராஜாவாக வித்தார்த், அடைக்கல மேரியாக லிஜோமோலின், கதிர்காமனாக யோகி பாபு, சாய் குமாராக இளவரசு, சாய் கிருபாவாக ஷாலி நிவேகாஸ் நடிக்கிறார்கள்;
இப்படத்தின் இசை பாரம்பரிய இசையுடன் கலந்து திரைப்பட இசையும் இருக்கும் வகையில், புதுமையாக கொண்டு வர முயற்சி செய்துள்ளனர்; இப்படத்தின் பூஜை நடைபெற்ற நிலையில் படப்பிடிப்பு பொங்கலுக்கு பிறகு, முதற்கட்டமாக சென்னையில் நடைபெறும் எனும் தகவலை அறிவித்துள்ளனர் படக்குழுவினர்.