Just In





LGM Trailer: ”தோனியிடம் ‘பேட்’ வாங்கவே இந்த படத்தில் நடித்தேன்” - நடிகர் யோகிபாபு
தோனியிடம் பேசி பேட் வாங்கி தரேன் என்று இயக்குனர் ரமேஷ் தமிழ் மணி கூறியதால், எல்ஜிஎம் திரைப்படத்தில் நடித்தேன்

தோனியிடம் பேசி பேட் வாங்கி தரேன் என்று இயக்குனர் ரமேஷ் தமிழ் மணி கூறியதால், எல்ஜிஎம் திரைப்படத்தில் நடித்ததாக காமெடி நடிகர் யோகிபாபு தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் வீரரான தோனியும், அவரது மனைவி சாக்சியும் இணைந்து திரைப்படம் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளனர். ‘தோனி எண்டர்டெயின்மெண்ட்’ என்ற பெயரில் தொடங்கப்பட்ட தயாரிப்பு நிறுவனம் முதல் படமாக ‘லெட்ஸ் கெட் மேரிட்’ என்ற எல்ஜிஎம் படத்தை தயாரித்து வருகிறது. காதல் திருமணத்தை கதைக்களமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த எல்சிஎம் படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்கியுள்ளார். லவ் டுடே மூலம் பிரபலமான இவானா, ஹரிஷ் கல்யாண், நதியா, யோகிபாபு என பலரும் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
படத்தின் போஸ்டர், டீசர்கள் வெளியாகி கவனத்தை ஈர்த்த நிலையில், இன்று இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் தோனி, அவரது மனைவி சாக்ஷி, ஹரிஷ் கல்யாண், யுவானா உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்றனர். அப்போது பேசிய யோகி பாபு, இயக்குனர் ரமேஷ் தமிழ் மணி எல்ஜிஎம் படத்தில் நடிக்க தன்னிடம் கால்ஷீட் கேட்ட போது, யோசித்து கொண்டிருந்ததாகவும், தோனியிடம் பேசி பேட் வாங்கி தருகிறேன் என இயக்குனர் கூறியதால் படத்தில் நடிக்க ஒப்பு கொண்டதாகவும் கூறியுள்ளார்.
படத்தில் ஹீரோவாக நடித்தது குறித்து பேசிய ஹரீஷ் கிருஷ்ணா, ஒவ்வொரு குடும்பமும் எதிர்கொள்ளும் பிரச்சனையை எல்ஜிஎம் பேசியுள்ளதாகவும், இந்த படத்தில் நடித்தது மிகவும் மகிழ்ச்சியாகவும், திருப்தியாகவும் இருந்ததாக கூறியுள்ளார். இவானா பேசுகையில், தோனி தயாரிக்கும் படத்தில் தானும் ஒரு பகுதியாக இருந்தது தனது அதிர்ஷ்டம் என கூறியுள்ளார்.
நிகழ்ச்சியில் வெளியான டீசருக்கு ரசிகர்களிடையே வரவேற்பு கிடைத்துள்ளது. காதலனின் அம்மாவை புரிந்து கொள்ள திருமணத்துக்கு முன்பாக அவருடன் டூர் செல்லும் காதலியும், காட்டில் நதியாவுடன், இவானா மாட்டி கொள்ளும் காட்சிகளும் இடம்பெற்றிருப்பது கதையை ஓரளவுக்கு கணிக்க முடிந்ததாக ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.