சோஷியல் மீடியாக்களில் இயக்குநர் நெல்சனை தாக்குவதை நிறுத்துங்கள் என்று ஆர்.ஜே. பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.


இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கும் ஆர்.ஜே. பாலாஜி, “நெல்சன் மிகச் சிறந்த இயக்குநர். நான் அவருடன் பல நிகழ்ச்சிகளில் இணைந்து பணியாற்றி இருக்கிறேன். நான் அவருடைய படங்களின் மிகப் பெரிய ரசிகன். அவர் மிகப் பெரிய திறமைசாலி, அவருடைய பயணம் நிச்சயம் அனைவருக்குமான முன்மாதிரி. நான் நிச்சயமாக சொல்கிறேன்.. வரும் காலத்தில் அவருடைய படங்கள் நிச்சயம் நமக்கு அதிகப்படியான சந்தோஷத்தை தரப்போகிறது. ஆகையால் இதை நிறுத்துங்கள்” என்று பதிவிட்டு இருக்கிறார். 






முன்னதாக, விஜய் நடித்த  ‘பீஸ்ட்’ திரைப்படத்தை இயக்குநர் நெல்சன் இயக்கி இருந்தார். படம் வெளியாவதற்கு முன்னதாக நடந்த ப்ரோமோஷன்கள் படத்தின் மீது அதிகப்படியான எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிட, ரசிகர்கள் பீஸ்ட் படத்தை காண ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால் இந்தப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை.






இதனால் ஏமாற்றமடைந்த ரசிகர்கள் சமூக வலைதளங்களில் மீம்களை வெளியிட்டு நெல்சனை தொடர்ந்து தாக்கி வருகின்றனர். இது குறித்து பேட்டி ஒன்றில் கருத்து தெரிவித்திருந்த லோகேஷ், எனக்கு வருத்தமாக இருக்கிறது. ரசிகர்கள் அவ்வாறு செய்யக்கூடாது” என்று கோரிக்கை விடுத்திருந்தார். இந்த நிலையில் நெல்சனுக்கு ஆதரவாக ஆர்.ஜே.பாலாஜி கருத்து தெரிவித்து இருக்கிறார். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண