விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னையில் உருவாக்கப்பட்டுள்ள ‘லியோ ஸ்டைல் விநாயகர் சிலை’ அனைவரையும் ஈர்த்து வருகிறது. இந்தப் போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு இன்னும் சில தினங்களே உள்ளன. இதற்கு நாடு முழுவதும் விநாயகர் சிலைகள் தாயரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ட்ரெண்டிங்கில் இருக்கும் விஷயங்களை வைத்து விநாயகர் சிலைகளை வடிவமைப்பார்கள். ஜெயிலர், புஷ்பா, பாகுபலி போன்ற திரைப்படங்கள் வெளியானபோது, அப்படங்களின் கதாபாத்திரங்கள் போன்ற விநாயகர் சிலைகள் மார்க்கெட்டில் விற்பனைக்கு வந்துன.
இது பார்ப்போரை ஈர்த்தது. அதுபோலவே, இந்த ஆண்டு சென்னையில் தயாரிக்கப்பட்டுள்ள இரண்டு விநாயகர் சிலைகள் கவனம் ஈர்த்து வருகிறது. சென்னை கொருக்குபேட்டையில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளால் உருவாக்கப்பட்டு வரும் இரண்டு விநாயகர் சிலைகள் மக்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லியோ திரைப்பட அறிவிப்பின்போது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிகர் விஜய் எடுத்துக்கொண்ட புகைப்படம் போன்று ஒரு பக்கம் விநாயகரும், மறுபக்கம் சிங்கமும் இருப்பதை போன்ற சிலை உருவாக்கப்பட்டுள்ளது. இது அனைவரும் ரசிக்கும்படி உள்ளது.
லியோ விநாயகர்
இந்த விநாயகர் சிலைகள் 70 ஆயிரம் ரூபாய் செலவில் 8 அடி உயரம் கொண்டாதாக வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சுமார், 25 நாள்களாக ஐந்து சிலை வடிவமைப்பு கலைஞர்களைக் கொண்டு இந்த சிலைகள் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்தாண்டு ஜெய்லர் விநாயகர் மிகவும் பிரபலமாக இருந்தது. ஜெய்லர் வெற்றி கொண்டாட்டம் இன்னும் தீரவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு வசூலில் சாதனை படைத்தது என்றால் மிகையாகாது.
லியோ
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் , த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், கெளதம் மேனன், பிரியா ஆனந்த், மிஸ்கின், அனுராக் காஷ்யப், சாண்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்க, 7 ஸ்க்ரீன் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. வரும் அக்டோபர் மாதம் 19-ஆம் தேதி படம் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் படம் குறித்தான அப்டேட்களை எப்போது கிடைக்கும் என்ற விஜய் ரசிகர்கள் காத்திருகின்றனர்.
லியோ படத்தின் முதல் அப்டேட் நடிகர் விஜய்யின் பிறந்தநாளன்று வெளியிடப்பட்டது. படத்தில் இடம்பெற்ற ‘நா ரெடி தான்’ பாடல் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து நடிகர் சஞ்சய் தத் மற்றும் நடிகர் அர்ஜூன் பிறந்தநாளன்று அந்தோனி தாஸ் மற்றும் ஹரோல்டு தாஸ் க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. நான் ரெடி பாடல் வெளியானதில் இருந்து ரசிகர்கள் குஷியாகிவிட்டனர். நீண்ட நாள்களுக்குப் பிறகு திரிஷா, விஜய் இருவரையும் திரையில் காண ரசிகர்கள் ஆர்வமுடன் இருக்கின்றன.
லியோ இன்டர்வெல் சீன்
பொதுவாகவே விஜய் படங்களில் இடைவேளைக் காட்சிகள் எப்படியானதாக இருக்கும் என்று தெரிந்துகொள்வதற்கு ரசிகர்கள் மிக அர்வமாக இருப்பார்கள். அந்த வகையில் விஜய் படங்களின் இடைவேளைக் காட்சிகளில் இதுவரை வந்ததிலேயே சிறந்ததாக ரசிகர்களால் சொல்லப்படுவது துப்பாக்கிப் படத்தில் வரும் ஐ ஆம் வெயிட்டிங் என்கிற வசனம். இந்த வசனம் எந்த அளவிற்கு புகழ்பெற்றது என்றால் விஜய்யின் அடுத்தடுத்து நான்கு படங்களின் இந்த வசனம் பயன்படுத்தப் பட்டிருக்கிறது.
தற்போது லியோ படத்தின் இடைவேளைக் காட்சி துப்பாக்கி படத்தைவிட சிறந்ததாக இருக்குமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகையில் லியோ படத்தின் இடைவேளைக் காட்சி குறித்து தயாரிப்பாளர் லலித் குமார் இப்படி தெரிவித்துள்ளார். “ லியோ படம் நடிகர் விஜயின் கேரியரிலேயே பெஸ்ட் படமாக இருக்கும். குறிப்பாக படத்தின் இடைவேளைக் காட்சியை நான் சமீபத்தில் பார்த்தேன் இந்த காட்சியில் நிச்சயம் ரசிகர்களுக்கு கூஸ்பம்ப்ஸை ஏற்படுத்தும். மொத்தம் 8 நிமிடம் இருக்கும் இந்த காட்சி நிச்சயம் ரசிகர்களுக்கு ரொம்பப் பிடிக்கும் “ என்று அவர் தெரிவித்துள்ளார்