லியோ
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி விஜய் நடித்திருக்கும் லியோ திரைப்படம் அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் லியோ திரைப்படத்தின் மூன்றாவது பாடலான் அன்பெனும் பாடல் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே இரண்டு பாடல்கள் வெளியான நிலையில் தற்போது மூன்றாவது பாடல் வெளியாகி இருக்கிறது.
நான் ரெடி
லியோ படத்தின் முதல் பாடலான நான் ரெடிதான் பாடல் நடிகர் விஜய் பிறந்தநாளன்று வெளியிடப் பட்டது. அபிதாப் பச்சன் நடித்த ஹம் படத்தில் இடம்பெற்ற ஜும்மா சும்மா பாடலை இன்ஸ்பிரேஷனாக வைத்து தான் இந்த பாடலை எடுத்துள்ளதாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். அனிருத் இசையைல் அமைந்த இந்த பாடலை விஜய் மற்றும் அசல் கோலார் பாடியுள்ளார்கள். இந்த பாடலில் நடிகர் விஜய் புகைப்பிடிக்கும் காட்சிகள் இருந்தது சமூக ஆர்வலர்களிடம் விமர்சனங்களைப் பெற்றது. மேலும் பாடலில் இடம்பெற்ற வரிகளை தொலைக்காட்சி ஒளிப்பரப்பிற்காக நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
பேடாஸ்
இதனைத் தொடர்ந்து லியோ படத்தின் இரண்டாவது பாடலான பேடாஸ் பாடல் வெளியானது. அனிருத் பாடிய இந்த பாடல் வழக்கமான அனிருத்தின் ராக் மியூசில் ஜானரில் அமைந்திருந்தது. பீஸ்ட் படத்தில் திரை தீப்பிடிக்கும், விக்ரம் படத்தில் நாயகன் மீண்டும் வரான், ஜெயிலர் திரைப்படத்தின் அலப்பறை கெளப்புறோம் முதலிய பாடல் வரிசையில் இந்தப் பாடலும் ரசிகர்களிடம் மிகப்பெரிய கவனம் பெற்றிருக்கிறது.
அன்பெனும்
இதுவரை கத்தியும் கடப்பாரையுமாக வெளியாகிய பாடல்களுக்கு மத்தியில் தற்போது மென்மையான ஒரு பாடலை வெளியிட்டிருக்கிறது லியோ படக்குழு. அன்பெனும் ஆயுதம் என்கிற இந்த பாடல் விஜய் த்ரிஷா மற்றும் இவர்களது மகள் ஆகிய மூவருக்கும் இருக்கும் அமைதியான சின்ன வாழ்க்கையை சித்தரிக்கும் பாடல் வரிகளால் நிறைந்திருக்கிறது. மேலும் எல்லா போஸ்டர்களிலும் கொலை வெறியுடன் காணப்பட்ட விஜய் முற்றிலும் ஹஸ்பண்ட் மெட்டிரியலாக இந்த பாடலில் மாறியுள்ளார். தமிழ் , தெலுங்கு , கன்னடம் , மலையாளம் , இந்தி உள்ளிட்ட மொழிகளில் இந்தப் பாடலை வெளியிட்டுள்ளது படக்குழு.
லியோ சிறப்புக் காட்சிகள்
வருகின்ற அக்டோபர் 19 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் லியோ திரைப்படத்தை ரசிகர்கள் மற்றும் படக்குழுவினரின் கோரிக்கைக்கு ஏற்றபடி சிறப்பு காட்சிகளை திரையிட தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது, இதன்படி அக்டோபர் 19 ஆம் தேதி காலை 9 மணிக்கு முதல் காட்சி தொடங்கப்பட வேண்டும் என்று நள்ளிரவு 1: 30 மணிக்கு இறுதிக்காட்சி முடியவேண்டும் என அரசு வலியுறுத்தி உள்ளது மேலும் படம் வெளியான முதல் வாரத்தில் திரையரங்கங்கள் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது