Sanjay Dutt Role Salary in LEO: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் லியோ படத்தின் எக்ஸ்க்ளூசிவ் தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.
சென்னையில் படப்பிடிப்பு
தமிழ் திரையுலகில் தனது முதல் மூன்று படங்கள் மூலமாகே தனக்கென ஒரு முத்திரையை பதித்தார் லோகேஷ் கனகராஜ். மாநகரம் படத்தின் மூலம் திரையுலகிற்கு இயக்குநராக அறிமுகமான இவர், அடுத்து கைதி, மாஸ்டர், விக்ரம் என வரிசையாக ஹிட் படங்களை கொடுத்து திரளான ரசிகர் கூட்டத்தை சம்பாதித்தார்.
அடுத்ததாக, இவர் இயக்கத்தில் இரண்டாம் முறையாக விஜய் இணைந்துள்ள லியோ படத்தின் படப்பிடிப்பு சென்னையில் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. படம் பற்றிய எதிர்பார்ப்புகள் எகிறி வரும் நிலையில் வாரம் இரண்டு அப்டேட்களாவது வந்து விடுகின்றன. அந்த வகையில், தற்போது ஒரு எக்ஸ்க்ளூசிவ் தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.
தந்தையாக சஞ்சய் தத்?
லியோ படத்தில் தமிழ் திரையுலகம் மட்டுமின்றி பாலிவுட்டிலிருந்து நடிகர் ஒருவரை இறக்குமதி செய்தள்ளார் லோகேஷ். ஏற்கனவே விஜய், த்ரிஷா, மன்சூர் அலி கான், கௌதம் வாசுதேவ் மேனன் என பல நட்சத்திரங்கள் இருக்கும் நிலையில், தற்போது சஞ்சய் தத் இந்த படத்தில் இணைந்துள்ளார்.
லியோ படத்தில் விஜய்க்கு தந்தையாக சஞ்சய் தத் நடிப்பதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. அதுமட்டுமின்றி, இப்படத்தில் மிரட்டலான வில்லனாக நடித்திருக்கும் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் தான் விஜய்யின் அப்பாவாம். சஞ்சய் தத் கொடூரமான வில்லனாக நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அப்பாவாக நடிப்பதாக பேசப்பட்டு வருகிறது. இருப்பினும் இருவருமே கேங்ஸ்டர்கள் எனவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
தற்போது இந்த தகவல் தான் இணையத்தில் வைரலாகி பரவி வருகிறது. சஞ்சய் தத்தின் கதாபாத்திரம் மூலம் லோகேஷ் கனகராஜ் மிகப்பெரிய ட்விஸ்ட்டை படத்தில் வைத்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக அர்ஜுன் இப்படத்தில் விஜய்யின் நண்பராக நடிப்பதாகவும், நண்பராக இருந்து பின்பு துரோகியாக மாறிவிடுவார் என்று சில தகவல்கள் கசிந்தன. இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியாத நிலையில், தற்போது விஜய்யின் அப்பாவா பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடிப்பதாக வந்த தகவல் ரசிகர்களை மேலும் எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளது.
நட்சத்திர பட்டாளங்கள்:
அதேபோல் சென்ற வாரம், விஜய்யுடன் சிங்கம் ஒன்று லியோ படம் முழுவதும் பயணிக்க உள்ளதாகவும், அவரது கதாபாத்திரத்தை பிரதிபலிக்க இந்த சிங்கம் அனிமேஷன் மூலம் உருவாக்கப்படுவதாகவும் கூறப்பட்டது. நடிகர்கள் அர்ஜூன், சஞ்சய் தத், மன்சூர் அலிகான், பிரியா ஆனந்த்,மிஷ்கின், மேத்யூ தாமஸ், கவுதம் மேனன், சாண்டி எனப் பெரும் நட்சத்திரப் பட்டாளமே இந்தப் படத்தில் இணைந்துள்ளனர்.
செவன் ஸ்க்ரீன் பேனரில் லலித்குமார் இந்தப் படத்தை தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். லியோ திரைப்படம் இந்த ஆண்டு அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகும் என ஏற்கெனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.