தமிழ் திரையுலகின் பெருமையை உலக அளவில் கொண்டு சென்று நடிகர்களாக திகழ்பவர்கள் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மற்றும் உலக நாயகன் கமலஹாசன். கமல்ஹாசன் வளர்ந்து வந்த காலத்தில் அவரது திறமையை பார்த்த பலரும் இவரது நடிப்புத் திறமை சிவாஜியைப் போல இருப்பதாக பலரும் புகழ்ந்தனர்.
சிவாஜியிடம் கேள்வி கேட்ட கமல்:
பல ஆண்டுகளுக்கு முன்பு கமல்ஹாசன் தனது மானசீக குருவான சிவாஜியிடம் பொதிகை தொலைக்காட்சிக்காக நேர்காணல் செய்தார். அப்போது, சிவாஜியிடம் கமல்ஹாசன் “ எனக்கு இன்ஸ்பிரேஷன் நீங்க.. உங்களுக்கு இன்ஸ்பிரேஷன் யாரு?” என்று கேட்பார்.
அப்போது, அவருக்கு பதில் தந்த சிவாஜி கணேசன், “ நான் சின்ன பிள்ளையில இருந்து அனேகமாக ஆங்கில படங்கள் பார்ப்பது உண்டு. ருடால்ஃப் வாலோண்டினோவோட சைலண்ட் படம் பாப்பேன். சைலண்ட் மூவில ஷீக்-னு ஒரு படம் இருக்கு. அதுதான் அவர் நடிச்ச டாக்கி பிக்சர்ஸ். அதுல இருந்து ஏகப்பட்ட படம் சார்லஸ் போயர், போரிஸ் கார்லோஃப் படங்கள் எல்லாம் பாத்துருக்கேன்.
மத்தவங்க நடிப்போட நம்ம நடிப்பு தனித்தன்மையில இருக்கனும்னு சின்ன புள்ளையில இருந்தே பயிற்சி பண்ணிட்டு வர்றதால என்னால ஏதோ சக்ஸஸ் பண்ண முடிஞ்சதோ என்னவோ.” என்றார்.
பயிற்சியே:
அதற்கு சிரித்துக்கொண்டே பதிலளித்த கமல்ஹாசன், “ நீங்க முடிஞ்சதோ என்னவோனு பணிவா சொல்றீங்க. ஒன்னொன்னா நீங்க எங்க இருந்து பிடிச்சீங்க. சார்லஸ் போயர்கிட்ட இருந்து நீங்க ஒன்னு பிடிச்சுருப்பீங்க. நீங்க நின்னு கையை நீட்டுறதைப் பாத்தா ஷேக்ஸ்பியர் நாடகங்கள் ஞாபகம் வருது. எப்படி?” என்பார்.
அதற்கு பதில் தந்த சிவாஜி கணேசன், “ அதெல்லாம் ட்ரை பண்றதுதான் ராஜா. ட்ரை பண்ணி நாமளே தெரிஞ்சுக்க வேண்டியது விஷயம். இது மத்தவங்க சொல்லிக் கொடுத்து வர்றது இல்ல. நடிப்பு ஓரளவு கல்லூரி வரை கத்துக்கொடுக்கலாம். நம்மகிட்டு இருந்து வர்றது இருக்கே. அந்த எக்ஸ்பிரஷன் இருக்குதே. என்ன கேரக்டர் நம்ம போட்றோமே அதுக்கு தக்கபடி ஆக்ட் பண்ணிட வேண்டியதுதான்” என்றார்.
தமிழில் இருந்து முதன்முதலில் ஆஸ்கார் வரைச் சென்ற திரைப்படம் சிவாஜிகணேசனின் தெய்வமகன் ஆகும். தமிழ் சினிமாவின் பல பிரபலங்கள் பலருக்கும் மானசீக குருவாக திகழ்ந்தவர் நடிகர் சிவாஜி ஆவார். சிவாஜியும் கமல்ஹாசனும் இணைந்து ஏராளமான படங்களில் நடித்துள்ளனர். அதில் இருவரும் இணைந்து நடித்த தேவர்மகன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் ஆகும்.