Singer S Janaki Funeral: மறைந்த பாடகி எஸ்.ஜானகியின் உடல் எங்கு? எப்போது? அடக்கம் செய்யப்படும் என்பது தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Continues below advertisement

எஸ். ஜானகி உடலுக்கு அரசு மரியாதை

மறைந்த பாடகி எஸ். ஜானகியின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளதோடு, அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என கர்நாடக முதலமைச்சர் சிவகுமார் அறிவித்துள்ளார். இதுதொடர்பான அறிக்கையில், “மெல்லிசை ராணி எஸ். ஜானகியின் இறுதிச் சடங்குகள் முழு அரசு மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும் என்று முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். அரசின் சார்பில் இறுதிச் சடங்குகளில் பங்கேற்க அமைச்சர் டாக்டர் யதீந்திர சித்தராமையா நியமிக்கப்பட்டுள்ளார். தனது அற்புதமான குரலால் கோடிக்கணக்கான மக்களின் இதயங்களை வென்ற அந்த மாபெரும் பாடகிக்கு மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த அரசு முடிவு செய்துள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

Continues below advertisement

எஸ். ஜானகி உடல் எங்கு? எப்போது? அடக்கம்

மைசூரில் உள்ள எச்.டி. கோட்டை சாலையில் அமைந்துள்ள கனியனஹுண்டியில் உள்ள நவீன் பண்ணை இல்லத்தில் எஸ். ஜானகியின் உடலுக்கான இறுதிச் சடங்குகள் நடைபெற உள்ளன. அதற்கு முன்னதாக, பொதுமக்களும் ரசிகர்களும் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக, அவரது பூதவுடல் காலை 8:00 மணி முதல் மைசூரில் உள்ள மகாராஜா கல்லூரி மைதானத்தில் வைக்கப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எஸ்.ஜானகியின் மறைவு செய்தி அறிந்த உடனேயே ஏராளமானோர் நேரிலும், சமூக வலைதளங்கள் வாயிலாகவும் இரங்கல் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

பாடகி எஸ். ஜானகி காலமானார்

தென்னிந்தியாவின் நைட்டிங்கேல் என வர்ணிக்கப்படும் பாடகி எஸ். ஜானகி, தனது 88வது வயதில், வயது மூப்பு காரணமாக மூச்சு திணறல் ஏற்பட்டு காலமானார். திரைப்பிரபலங்கள், அரசியல்வாதிகள் மற்றும் பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 60 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் பயணித்த எஸ். ஜானகி தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தியா, ஒடியா, துலு, உருது, பஞ்சாபி மற்றும் பெங்காலி என சுமார் 20 மொழிகளில் 48 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ளார்.

பி.பி. ஸ்ரினிவாஸ், எஸ்.பி. பாலசுப்ரமணியம் மற்றும் டாக்டர் ராஜ்குமார் ஆகியோருடன் இணைந்து இவர் பாடிய டூயட் பாடல்கள் என்றென்ற்மும் ரசிகர்களை கொண்டாட செய்யும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ராஜேஷ்வர ராவ், கே.வி. மகாதேவன், எம்.எஸ், விஸ்வநாதன், தக்‌ஷினா மூர்த்தி, இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் அனிருத் என தென்னிந்தியாவின் அனைத்து முக்கியமான இசையமைப்பாளர்களுடனும் இவர் பணியாற்றியுள்ளார்.

இதையும் படியுங்கள்: TN Weather Update: சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழை, வெயில் பொளக்கும்? - தமிழக வானிலை அறிக்கை

எஸ். ஜானகி குடும்பம்

கடந்த 1959ம் ஆண்டு ஆயுர்வேத மருத்துவரான வி. ராம்பிரசாத் என்பவரை எஸ்.ஜானகி திருமணம் செய்துகொண்டார். அவர், கடந்த 1997ம் ஆண்டு எதிர்பாராத விதமாக உயிரிழந்தார். இந்த தம்பதிக்கு பிறந்த கிதார் கலைஞரான முரளி கிருஷ்ணா என்பவரும் கடந்த ஜனவரி மாதம் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து தனது மருமகள் மற்றும் பேத்திகளுடன் எஸ். ஜானகி வாழ்ந்து வந்தது குறிப்பிடத்தக்கது.