நடிகர் கவுண்டமணியின் மனைவி காலமானார்! சோகத்தில் திரையுலகம்
காமெடி நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி உடல்நலக்குறைவு காரணமாக காலை 10:30 மணி அளவில் காலமானார்.

காமெடி கிங் கவுண்டர்களின் மன்னன் என அழைக்கப்படும் நகைச்சுவை நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி திடீரென காலமானது திரையுலகினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
கவுண்டமணி:
1980 மட்டும் 90களில் தனது காமெடியும் மூலம் அனைவரையும் கவர்ந்தவர் நடிகர் கவுண்டமணி. இவரும் நடிகர் செந்திலும் சேர்ந்து அடிக்கும் லூட்டி இன்றுவரை இவருக்கு என்று தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளது அதனால் இந்த எவர்கின் காம்போவை ரசிகர்கள் இன்று வரையும் கொண்டாடி வருகின்றனர். கவுண்டமணி செந்தில் காம்பவுக்காகவே அதிக நாட்கள் ஓடிய திரைப்படங்களும் உண்டு 1970 ஆம் ஆண்டு வெளியான ராமன் எந்தன் ராமனடி என்கிற படத்தின் மூலம் ஒரு சின்ன வருடத்தில் அறிமுகமானார் நடிகர் கவுண்டமணி அதன் பிறகு 1971 ஆம் ஆண்டு தேனும் பாலும் என்கிற படத்தில் சுப்ரமணி என்கிற ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
அதன் பிறகு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் ஆன ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், விஜய், பிரசாந்த். சத்யராஜ் ஆகியோரின் படங்கள் நடித்துள்ளார் கவுண்டமணி. குறிப்பாக இவரும் சத்யராஜும் சேர்ந்து நடித்த படங்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் இவர்களின் காம்போவில் வெளியான மலபார் போலீஸ், ரிக்ஷா மாமா வில்லாதி வில்லன் தாய் மாமன் மாமன் மகள் திருமதி பழனிசாமி நடிகன் குங்குமபொட்டு கவுண்டர் வண்டிச்சோலை சின்னராசு ஆகிய படங்கள் மெகா ஹிட் அடித்தன.
மனைவி காலமானார்:
நடிகர் கவுண்டமணிக்கு சாந்தி என்கிற மனைவி உள்ளார் இருவரும் காதலித்து 1963 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர் கவுண்டமணி சாந்தி தம்பதிகளுக்கு செல்வி சுமித்ரா என இரண்டு மகள்கள் உள்ளனர். கடந்த சில தினங்களாக உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டு வந்த கவுண்டமணியின் மனைவி சாந்தி இன்று காலை 10:30 மணி அளவில் உயிரிழந்தார். அவர்ருக்கு வயது 67.
நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) உடல்நலக்குறைவால் காலமானார்#Goundamani #actor #Shanthi #RIP #death #Goundamaniwife pic.twitter.com/E5XIpDbvWz
— ABP Nadu (@abpnadu) May 5, 2025
அவரின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக தேனாம்பேட்டையில் உள்ள கவுண்டமணியின் வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. திரைப்படங்கள் உள்ளிட்ட பலரும் அவருக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.





















