சர்தார் 2
பி.எஸ் மித்ரன் இயக்கத்தில் கார்த்தி தற்போதுச் சர்தார் 2 திரைப்படத்தின் நடித்து வருகிறார். சர்தார் முதல் பாகம் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியாகி கமர்சியல் ரீதியாக வெற்றிபெற்றது. பொலிட்டிக்கல் ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவான இதில் கார்த்தி தந்தை மகன் என இரு வேடங்களில் நடித்திருந்தார். சர்தார் 2 படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் முடிவுக்கு வந்தது . பிரின்ஸ் பிக்ச்சர்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார். எ.ஸ்.ஜே சூர்யா , ஆஷிகா ரங்கநாதன் , ரஜிஷா விஜயன் , யோகி பாபு , மாளவிகா மோகனன் ஆகியோ இப்படத்தில் நடித்து வருகிறார்கள்.
எம்புரான் ஸ்டைலில் சர்தார் 2 முன்னோட்டம்
சர்தார் 2 படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு ஜூலை மாதம் தொடங்கியது. வரும் மே 30 ஆம் தேதி இப்படம் திரையரங்கில் வெளியாக இருக்கிறது. சர்தார் முதல் பாகத்தைக் காட்டிலும் பல மடங்கு பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது சர்தார் 2. முந்தைய பாகத்தை விட அதிகமான ஆக்ஷன் திரைப்படமக இந்த படத்தை எதிர்பார்க்கலாம். இன்று ரமலான் பண்டிகையை முன்னிட்டு சர்தார் 2 படத்தின் முன்னோட்ட வீடியோ மற்றும் ஃபர்ஸ்ட் லுக் படக்குழு வெளியிட்டுள்ளது.
செம ஸ்டைலான மேக்கிங்கில் கார்த்தியின் சண்டைக் காட்சி ஒன்று இந்த முன்னோட்டத்தில் இடம்பெற்றுள்ளது. இன்னொரு பக்கம் படத்தின் முக்கிய வில்லனாக பிளாக் டேக்கர் கதாபாத்திரத்தில் எஸ்.ஜே சூர்யாவை அறிமுகப்படுத்தி உள்ளார்கள். செம மாஸ் கிளாஸ் கலந்த அதிரடி படமாக சர்தார் 2 படம் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். சமீபத்தில் மோகன்லால் நடித்து மலையாளத்தில் வெளியான எம்புரான் படத்தின் ஸ்டைலில் சர்தார் 2 படம் இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளார்கள்.