அஜித் நடிப்பில் உருவான 'வலிமை' படம் கடந்த 24-ம் தேதி வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், அஜித் குமார்,போனி கபூர் மற்றும் ஹெச்.வினோத் குழு ஏகே 61 படத்தில் மீண்டும் சேர்ந்து பணியாற்ற உள்ளதாக தகவல் வெளியானது.


ஏகே 61 படத்தின் முதற்கட்ட ஷூட்டிங் பணிக்காக ஹைதராபாத்தில் பிரமாண்ட செட் அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. அதனை அடுத்து, மார்ச் 9-ம் தேதி படத்தின் ஷூட்டிங் தொடங்க இருப்பதாக தகவல் வெளியானது. இந்த படத்தில் நடிகர் அஜித் குமாருக்கு ஜோடியாக நாயகி பூஜா ஹெக்டே நடிக்கலாம் எனவும், அனிருத் இசையமைக்கலாம் என்ற தகவலும் வெளியாகி இருந்தது. 






இந்நிலையில், அஜித்தின் ஒரு புதிய லுக்கின் ஒரு கருப்பு வெள்ளை மாதிரியை போனி கபூர் ஏற்கெனவே ட்விட்டரில் வெளியிட்டார். இந்நிலையில் அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. மனைவி, மகன், மகளுடன் அஜித் இருக்கும் புகைப்படமும், மற்றொரு புகைப்படமும் இணையத்தில் வைரலாகி வருகிறது.


அது அடுத்தப்படத்துக்கான லுக் என்பதால் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். AK 61 படத்துக்காக அஜித் உடல் எடையை அதிகளவில் குறைக்கவுள்ளதாகவும், அதற்கான உடற்பயிற்சியில் தீவிரமாக அவர் இறங்கவுள்ளதாகவும் ஏற்கெனவே தகவல் வெளியானது.