தக் லைஃப்
மணிரத்னம் இயக்கி கமல் நடித்துள்ள தக் லைஃப் திரைப்படம் வரும் ஜூன் 5 ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கிறது. த்ரிஷா , சிம்பு , ஜோஜூ ஜார்ஜ் , அபிராமி , அசோக் செல்வன் , நாஸர் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது.
தக் லைஃப் படத்திற்கு எதிர்ப்பு
தக் லைஃப் படத்தில் ஆடியோ லாஞ்சில் கன்னட மொழி பற்றிய கமலின் கருத்து கர்நாடக மாநிலத்தில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழில் இருந்து பிறந்தது தான் கன்னட மொழி என கமல் சொன்னதற்கு கன்னட மொழி சார்ந்த அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவும் கமலின் கருத்து குறித்து கண்டனம் தெரிவித்திருந்தார். இரண்டு நாட்களுக்குள் கமல் மன்னிப்பு கேட்காவிட்டால் கர்நாடகாவில் தக் லைஃப் படத்தை வெளியிட தடை விதிக்கப்படும் என கன்னட ஃபிலிம் சேம்பர் சார்பாக மறுபக்கம் தன்னுடைய கருத்திற்காக தான் மன்னிப்பு கேட்கப் போவதில்லை என கமல் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
கமலை விமர்சித்த மணிவண்ணன்
கமலுக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் அவருக்கு எதிரான வீடியோக்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார்கள். அந்த வகையில் கமலை இயக்குநர் மணிவண்ணன் கடுமையாக விமர்சித்த வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் மணிவண்ணன் கமல் ஐயங்கார் சமுதாயத்தைச் சேர்ந்தவர் அவர் விஸ்வரூபம் , தசவதாரம் என தனது கடவுளை வைத்து தான் படமெடுப்பார். அவர் ஒரு விஷ ஊசி என மணிவண்ணன் பேசியுள்ளார்.