லால் சலாம் (Lal Salaam) திரைப்படத்துக்காக நடிகர் ரஜினிகாந்த் (Rajinikanth) வாங்கிய சம்பள விவரம் வெளியாகியுள்ளது.
மகளுக்காக கௌரவக் கதாபாத்திரத்தில் ரஜினி
தன் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள லால் சலாம் திரைப்படத்தில் ஹீரோவாக அல்லாமல், முக்கியப் பாத்திரத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் லால் சலாம். 3, வை ராஜா வை, ஆவணப் படமான சினிமா வீரன் ஆகிய படங்களைத் தொடர்ந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இந்தப் படத்தை இயக்குகிறார்.
விஷ்ணு விஷால், விக்ராந்த் இருவரும் இப்படத்தில் ஹீரோவாக நடிக்க, நடிகைகள் தன்யா ராஜேந்திரன், நிரோஷா, ஜீவிதா, நடிகர்கள் தம்பி ராமைய்யா, செந்தில், கிரிக்கெட் வீரட் கபில் தேவ் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் இணைந்துள்ளனர். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்துக்கு இசையமைத்துள்ள நிலையில், ஏற்கெனவே பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன.
பிப்.9 ரிலீஸ்
லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா முன்னதாக ஜன.26ஆம் தேதி கோலாகலமாக நடைபெற்றது. வரும் பிப்ரவரி 9ஆம் தேதி இப்படம் வெளியாக உள்ளது.
மொய்தீன் பாய் எனும் மும்பை தாதாவாக இருக்கும் நடிகர் ரஜினிகாந்த், விஷ்ணு விஷால், விக்ராந்த் என கிரிக்கெட் போட்டியாளர்களிடையே நடக்கும் மத அரசியலை கேள்வி கேட்பது போல இப்படத்தின் டீசர் வெளியாகி ஏற்கெனவே வரவேற்பைப் பெற்றது. மேலும் ரஜினிகாந்தின் மொய்தீன் பாய் க்ளிம்ஸ் வீடியோவும் வெளியாகி லைக்ஸ் அள்ளியது.
சம்பளம் இத்தனை கோடிகளா!
இந்நிலையில், மகளின் லால் சலாம் படத்துக்காக நடிகர் ரஜினிகாந்த் வாங்கிய சம்பளம் குறித்த விவரம் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி கௌரவத் தோற்றத்தில் தான் நடித்த மொய்தீன் பாய் கதாபாத்திரத்துக்காக நடிகர் ரஜினிகாந்த் ரூ.40 கோடி சம்பளம் வாங்கியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக ஜெயிலர் படத்துக்காக நடிகர் ரஜினிகாந்த் ரூ.110 கோடி சம்பளம் வாங்கியதாகத் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் கெஸ்ட் ரோல் என்பதால் இப்படத்தில் ரஜினிகாந்த் தன் சம்பளத்தை பாதிக்கும் மேல் குறைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
சர்ச்சைக்கு விளக்கம்
இதனிடையே அயோத்தியில் பாபர் மசூதியை இடித்த இடத்தில் கட்டப்பட்ட ராமர் கோயில் திறப்பு விழாவில், நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்ட இணையத்தில் கடும் விமர்சனங்களைப் பெற்ற நிலையில், தன் அப்பாவை சங்கி என பலரும் அழைப்பது வருத்தமளிப்பதாக லால் சலாம் இசை வெளியீட்டு விழாவில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வருத்தம் தெரிவித்திருந்தார். நாளை மறுநாள் பிப்.4ஆம் தேதி லால் சலாம் படத்தின் இசை வெளியீட்டு விழா சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: Ajith: நான் கடவுள் முதல் நந்தா வரை! அஜித் 'நோ' சொல்லி சூப்பர் ஹிட் அடித்த படங்களின் பட்டியல்!