ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் லால் சலாம் (Lal Salaam).


விஷ்ணு விஷால் - விக்ராந்த் என இரட்டை ஹீரோக்கள் நடித்துள்ள இந்தப் படத்தில் ரஜினிகாந்த் மொய்தீன் பாய் எனும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.  இவர்களைத் தவிர 80ஸ் நடிகைகள் நிரோஷா, ஜீவிதா, தம்பி ராமையா, கே.எஸ்.ரவிகுமார், செந்தில்
முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.


ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்துக்கு இசையமைத்துள்ள நிலையில் வரும் 2024ஆம் ஆண்டு பொங்கலுக்கு இப்படம் வெளியாக உள்ளது. முன்னதாக தீபாவளிக்கு லால் சலாம் டீசரும், ரஜினிகாந்த் பிறந்தநாளுக்கு இப்படத்தின் க்ளிம்ஸ் வீடியோவும் வெளியானது.


கிரிக்கெட் சார்ந்த கதை என முன்னதாகக் கூறப்பட்ட நிலையில்,  மதத்தை வைத்து கிரிக்கெட்டில் செய்யப்படும் அரசியல், அதனால் ஏற்படக்கூடிய விளைவுகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இப்படத்தின் டீசர் அமைந்திருந்தது, படத்தின் மீதான எதிர்பார்ப்புகளை மேலும் கூட்டியது.


தற்போது போஸ்ட் ப்ரொடக்‌ஷன்ஸ் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில் இப்படத்தின் முதல் சிங்கிள் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு ரஜினிகாந்த் ரசிகர்களை மேலும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. 


தேர் திருவிழா எனும் லால் சலாம் படத்தின் முதல் பாடல் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரஜினிகாந்த் - ஏ. ஆர்.ரஹ்மான் காம்போ பல நாள்களுக்கு இப்படத்தில் இணைந்துள்ள நிலையில் படத்தின் பாடல்கள் மீதும் எதிர்பார்ப்புகள் எகிறியுள்ளன.






திருவண்ணாமலையில் தொடங்கி, மும்பை, பாணிடிச்சேரி எனத் தொடர்ந்த இப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நிறைவடைந்தது.


தொடர்ந்து இப்படம் பொங்கல் ரிலீசாக வெளியாக அறிவிக்கப்பட்ட நிலையில், நடிகர் ரஜினிகாந்த், கிரிக்கெட் வீரர் கபில்தேவ் ஆகியோர் தங்கள் காட்சிகளுக்கு டப்பிங் பேசும் புகைப்படங்கள், வீடியோக்களை  லைகா நிறுவனம் பகிர்ந்தது.


வரும் ஆண்டு லால் சலாம் மற்றும் த.செ.ஞானவேல் இயக்கும் வேட்டையன் ஆகிய திரைப்படங்கள் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்தடுத்து வெளியாக உள்ளது அவரது ரசிகர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.


மேலும் படிக்க: Bigg Boss 7 Tamil Poornima: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பூர்ணிமா மீது வன்மத்தை காட்டுகிறாரா கமல்ஹாசன்? - மனம் திறந்து பேசிய தந்தை


Fight Club Review: சிறப்பா சண்டை பண்ணாங்களா.. லோகேஷ் கனகராஜ் தயாரித்துள்ள ‘ஃபைட் கிளப்’ பட விமர்சனம்!