Lal Salaam Audio Launch LIVE: எனது கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக அஜித்குமார் இருக்க வேண்டும் - விஷ்ணு விஷால்
Lal Salaam Audio Launch LIVE Updates:
எனது கிரிகெட் அணியின் பயிற்சியாளராக அஜித்குமார் இருக்கவேண்டும் என ஆசைப்படுகின்றேன் என விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.
ரஜினி சார் சினிமாவில் மட்டும் சூப்பர் ஸ்டார் இல்ல... மனிதனாக மிகப்பெரிய சூப்பர் ஸ்டார் என விக்ராந்த் தெரிவித்துள்ளார்.
லால் சலாம் இசை வெளியீட்டு விழாவில் மகிழ்ச்சி பொங்க நடனமாடிய ஆட்டோ ஓட்டும் பெண்கள்
லால் சலாம் படத்தில் இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் பேசியது.
லால் சலாம் படத்தின் இசை வெளியீட்டில் பேசிய இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார், ஜெயிலர் போன்ற மாஸான படத்தினைக் கொடுத்த நெல்சனுக்கு நன்றி. அந்த படத்தில் பல்வேறு இடங்களில் புல்லரிக்கும் காட்சிகள் இருந்தது. நான் முத்து, படையப்பா போன்ற படங்கள் செய்தபோது இருந்த மாஸ் கொஞ்சம் கூட குறையாமல் கதை அமைத்து ஜெயிலர் படத்தை கொடுத்த நெல்சனுக்கு நன்றி என பேசினார்.
லால் சலாம் படம் பொலிட்டிகலான படம். இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் நடித்துள்ளார். ஆனால் அந்த படத்தில் நான் கதாநாயகன் என்பது எனக்கு பெருமையாக உள்ளது. இந்தியாவில் தற்போது நடக்கும் அரசியல் நிகழ்வுகளை மையமாக கொண்ட படம். படம் அனைவருக்கும் நிச்சயம் புடிக்கும் என ரெட் கார்ப்பெட்டில் பேசும்போது விஷ்ணு விஷால் பேசியுள்ளார்.
நான் சூப்பர் ஸ்டாரை முதல் நாள் பார்த்த போது சும்மா சிங்கம் மாதிரி நடந்து வந்தாரு. படம் முள்ளும் மலரும் மாதிரி க்ளாஸாவும் இருக்கும் பாட்ஷா மாதிரி மாஸாகவும் இருக்கும் என தங்கதுரை பேசியுள்ளார்.
இசை வெளியீட்டு விழாவில் நகைச்சுவை நடிகர் தங்கதுரை பேசி வருகின்றார்.
லால் சலாம் இசை வெளியீட்டு விழாவிற்கு தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு வந்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் இசை வெளியீட்டு விழாவிற்கு அரங்கிற்குள் காரில் வந்து இறங்கினார்.
லால் சலாம் படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு நடிகர் ரஜினிகாந்த் வருகை தந்துள்ளார்.
லால் சலாம் படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் வந்துள்ளார்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் லால் சலாம் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை தனியார் கல்லூரியில் நடைபெற்று வருகின்றது.
Background
நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள லால் சலாம் (Lal Salaam) படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடைபெற உள்ளதாக படக்குழு அறிவிப்பு ஏற்கனவே வெளியிட்டது. அதன்படி இன்று அதாவது ஜனவரி 26ஆம் தேதி இசை வெளியீட்டு விழா நடைபெற்று வருகின்றது.
லைகா நிறுவனம் தயாரிப்பில் நீண்ட இடைவெளிக்குப் பின் இயக்குநராக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் களமிறங்கும் படம் “லால் சலாம்”. இந்த படத்தில் விக்ராந்த், விஷ்ணு விஜய், விக்னேஷ், ஜீவிதா, நிரோஷா, தம்பி ராமையா, கே.எஸ்.ரவிகுமார், செந்தில், லிவிங்க்ஸ்டன், விவேக் பிரசன்னா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்தில் ரஜினிகாந்த் “மொய்தீன் பாய்” என்ற கேரக்டரில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் முன்னாள் இந்திய அணி கேப்டன் கபில்தேவ் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த படம் வரும் பிப்ரவரி 9 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்படியான நிலையில் லால் சலாம் படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக வரும் ஜனவரி 26 ஆம் தேதி தாம்பரத்தில் உள்ள ஸ்ரீ சாய்ராம் கல்லூரியில் நடைபெறும் என படக்குழு அறிவித்ததன் அடிப்படையில் தற்போது நடைபெற்று வருகின்றது. இசைப்புயல் ரஹ்மானின் கிளாசிக் பாடல்கள் மற்றும் தலைவரின் குட்டிக்கதை கேட்க தயாராகுங்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -