ஜோதிகா & சூர்யா தயாரிப்பில் சூர்யா, மணிகண்டன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடித்திருக்கும் படம் ஜெய் பீம். பத்திரிகையாளர் ஞானவேல் இயக்கியிருக்கும் இப்படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டது. படத்தை பார்த்த ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள் என பலரும் படத்தையும், படத்தில் பணியாற்றியவர்களையும் பாராட்டினர்.
இதற்கிடையே படத்தில் ஒரு காட்சியில் இடம்பெற்ற காலண்டர் மூலம் வன்னியர் சமுதாயத்தை தவறாக சித்தரித்திருப்பதாக சர்ச்சை வெடித்தது. இதனையடுத்து பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் சூர்யாவுக்கு 9 கேள்விகள் எழுப்பி கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.
மேலும், அந்தக் கடிதத்தில், இந்தப் படத்தில் நீங்கள் உங்களின் வன்மத்தைக் காட்டினால், அடுத்து உங்களின் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் போது அவர்கள் தங்களின் கோபத்தைக் காட்டக்கூடும். இவை எதுவுமே தேவையில்லை எனவும் குறிப்பிட்டிருந்தார். அன்புமணியின் இந்தக் கடிதத்தை படித்த ஒரு தரப்பினர் வன்னியர் இளைஞர்களை அவர் தவறாக வழிநடத்துகிறார் என்பதற்கு இதுவே சாட்சி என்று விமர்சனம் வைத்தனர்.
இதனையடுத்து அன்புமணி ராமதாஸுக்கு பதில் எழுதிய நடிகர் சூர்யா, “படைப்புச் சுதந்திரம் என்ற பெயரில் எந்தவொரு சமுதாயத்தையும் இழிவுபடுத்தும் உரிமை இங்கு எவருக்கும் வழங்கப்படவில்லை’ என்கிற தங்களின் கருத்தை முழுவதுமாய் நன ஏற்கிறேன். அதே போல ‘படைப்பு சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் வராமல் காக்கப்பட வேண்டும்’ என்பதை நீங்களும் ஏற்பீர்கள் என்று நம்புகிறேன்” என குறிப்பிட்டிருந்தார்.
சர்ச்சைகள் ஒரு பக்கம் சூழந்திருந்தாலுக் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு உள்ளிட்டோர் பார்த்து தங்களது பாராட்டை சூர்யாவுக்கும், படக்குழுவுக்கும் தெரிவித்தனர்.
இந்நிலையில் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் தனது ட்விட்டர் பக்கத்தில், “தயாரிப்பாளர்கள் கதையில் நேர்மையாக இருந்திருந்தால் ஜெய் பீம் ஒரு சிறந்த ஊக்கமூட்டும் படமாக இருந்திருக்கும். காவல்துறையின் அட்டூழியத்திற்கு எதிராக சாதி, மத வேறுபாடு இல்லாமல் மக்கள் ஒன்றுபட்டு நின்றது நிஜ வாழ்க்கை சம்பவம்! பிரதிநிதித்துவம் அவசியம் ஆனால் தவறாக சித்தரிப்பது அழிவு என பதிவிட்டுள்ளார்.
மேலும் மற்றொரு ட்வீட்டில், “உண்மையாக கடலூரில் ராஜாக்கண்ணுவுக்கு எதிராக நடந்த போலீஸ் அராஜகத்திற்கு எதிராக சாதி, மத பேதமின்றி பொதுமக்கள் ஒன்று திரண்டனர். ஆனால் அதையெல்லாம் விட்டுவிட்டு ஒரு குறிப்பிட்ட ஜாதியை தவறாக சித்தரிப்பதை தவிர்த்திருக்கலாம். உண்மைக் கதையை படமாக எடுக்கும் போது ஒரு படத்திற்கு எப்போதும் விவரித்தல் என்பது மிகவும் முக்கியம். ஆனால் தவறாக விவரித்திருப்பது ஆக்கப்பூர்வமானது அல்ல, பாதிப்பைத்தான் ஏற்படுத்தும்” என குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் சூழலில் ரசிகர் ஒருவர்ஆனால் நீங்கள் அன்று ஜெய்பீம் பார்த்துவிட்டு படத்தில் சாதி அல்லது மதம் தொடர்பான எதையும் நான்ள் உணரவில்லை.! என்று கூறியிருந்தீர்கள். ஆனால் இப்போது நீங்கள் திரைப்படத்தைப் பற்றிய உங்கள் கருத்தை மாற்றிவிட்டீர்கள். ஏன் இரு வேறு மனநிலை என்று கேள்வி எழுப்பி இருந்தார்.
இதற்கு பதிலளித்த லட்சுமி, “திரைப்படம் மனதைத் தொட்டது & உண்மைச் சம்பவம் என்று நம்பினேன். பின்னர் சர்ச்சைகள் எழுந்தபின் நான் ஆய்வு செய்து பார்த்த போது தான் தெரிந்தது. உண்மை சம்பவம் மக்கள் ஒருவருக்கு ஒருவர் நின்றது தான் என்று ! தயாரிப்பாளர்கள் தங்கள் கதைக்கு ஏற்றவாறு கையாண்டுள்ளனர்! தவறான விளக்கத்தை ஏற்க முடியாது” என கூறியுள்ளார். இதனையடுத்து அது வேற வாயி இது வேற வாயி என லட்சுமி ராமகிருஷ்ணனை நெட்டிசன்கள் கலாய்த்துவருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்