Kushboo - Rajini meeting: ‛றெக்கை கட்டி பறக்குதடி...’ சூப்பர் ஸ்டாருடன் குஷ்பூ திடீர் சந்திப்பு!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நேரில் சந்தித்த நடிகை குஷ்பூ எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரல்

Continues below advertisement

 

Continues below advertisement

தமிழ் சினிமாவின் அடையாளம் சூப்பர் ஸ்டார். அவரை பிடிக்காதவர் என யாராவது இருப்பார்களா என்ன. சின்ன குழந்தை முதல் பொக்கை கிழவன் வரை அனைவரையும் தனது ஸ்டைலை வைத்தே மயக்கியவர். எத்தனை பெரிய நடிகராக இருந்தாலும் இருந்து தன்னடக்கத்துடன் சிம்ப்ளிஸிட்டியை கையாளும் மகா வித்தகர். இவர் நடிகராக திரைத்துறையில் நுழைந்து முதல் இன்று வரை பல ஹீரோயின்களுடன் டூயட் பாடியுள்ளார். அவருடன் நடித்த நடிகைகளின் லிஸ்ட் ஏராளம்.

 

சூப்பர் ஹிட் ஜோடி :

அப்படி சூப்பர் ஸ்டாருடன் ஜோடி சேர்ந்த பல ஹீரோயின்களில் மிகவும் கச்சிதமான ஒரு ஜோடி ரஜினி - குஷ்பூ ஜோடி. மன்னன், அண்ணாமலை, பாண்டியன் போன்ற சூப்பர் ஹிட் திரைப்படங்களில் ஜோடி சேர்ந்த இவர்கள் 1992 ஆம் ஆண்டிற்கு பிறகு கிட்டத்தட்ட 28 ஆண்டுகள் கழித்து "அண்ணாத்த" திரைப்படம் மூலம் இணைந்தார்கள். ரசிகர்களின் வரவேற்பு பெற்ற இந்த ஜோடி மீண்டும் இணைந்தால் ரசிகர்களுக்கு கொண்டாட்டமே. 

 


லேட்டஸ்ட் கிளிக் :

இயக்குனர் நெல்சன் இயக்கும் "ஜெயிலர்" திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் மிகவும் பிஸியாக நடித்து வரும் இந்த சமயத்தில் நடிகை குஷ்பூ சூப்பர் ஸ்டாருடன் ஒரு இணைந்து எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் நடிகை குஷ்பூ. சூப்பர் ஸ்டாருடன் நட்பு ரீதியான மகிழ்ச்சியான சந்திப்பு. உங்களின் அன்பான அக்கறையான வார்த்தைகளுக்கு நன்றி. மச் லவ் டு யூ சார் என அழகான ஒரு போஸ்ட் செய்துள்ளார் குஷ்பூ.  இருப்பினும் இந்த அழகான புகைப்படம் அவர்களின் ரசிகர்களுக்கு ஒரு பொக்கிஷமாக இருக்கிறது. பல ரசிகர்களும் திரை பிரபலங்களும் இந்த போஸ்டிற்கு லைக்ஸ்களை குவித்து வருகிறார்கள் 

 

 

பிஸியாக இருக்கும் குஷ்பூ :

நடிகை குஷ்பூ சினிமா, அரசியல், சின்னத்திரை, குடும்பம் என மறுபக்கம் மிகவும் சுறுசுறுப்பாகவும், பிஸியாகவும் இருந்து வருகிறார். அதற்கு இடையில் தனது உடல் இடையையும் வெகுவாக குறைத்து இளம் நடிகை போல காட்சியளிக்கிறார் நம்ம குஷ்பு. இரண்டு மகள்களுக்கு தாயான பிறகும் இன்றும் ஸ்லிம்மாக வலம் வருகிறார் குஷ்பூ.

 

Continues below advertisement
Sponsored Links by Taboola