அமீர் கான், கரீனா கபூர் நடிப்பில் ‘லால் சிங் சத்தா’ படம் வரும் ஆகஸ்ட் 11ஆம் தேதி திரைக்கு வரும் நிலையில், படக்குழுவினர் தீவிரமாக ப்ரொமோஷன் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.


அமீர் கான், கரீனா கபூர்


அதன் ஒரு பகுதியாக அமீர் கானும் கரீனா கபூரும் முன்னதாக காஃபி வித் கரண் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர்.  நாளை மறுநாள் (ஆகஸ்ட்.04) இந்த எபிசோட் ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியிடப்பட உள்ள நிலையில், இந்த எபிசோடின் ப்ரொமா முன்னதாக வெளியாகி ஹிட் அடித்துள்ளது.




காஃபி கரண் சீசன் 7 தொடங்கி இதுவரை நான்கு எபிசோட்கள் நிறைவடைந்துள்ள நிலையில், தொடர்ந்து இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற ரன்வீர்,  விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டே, சமந்தா உள்ளிட்டோரிடம் அவர்களது பாலியல் வாழ்வு, தனிப்பட்ட பக்கங்கள் குறித்து ஒரே மாதிரியான கேள்விகள் இடம்பெற்று வந்தன.


மடக்கிப் பிடித்த அமீர் கான் 


இது குறித்து நெட்டிசன்களும் கரண் ஜோஹரை வறுத்தெடுத்து வந்த நிலையில், இந்நிகழ்ச்சியின் பார்வையாளர்கள் பலரும் கரணிடம் எழுப்ப நினைத்த கேள்வியை அவரது நெற்றிப்பொட்டில் அடித்தவாறு அமிர் கான் கேட்டு ஆடியன்ஸ் மனதைக் குளிர்வித்துள்ளார்.


இந்த எபிசோடிலும் கரண் ஜோஹர் வழக்கம்போல் தன் நெருங்கிய தோழியும் நடிகையுமான கரீனா கபூரிடம் ”குழந்தைகள் பெற்ற பின் பாலியல் வாழ்வு எவ்வாறு உள்ளது” எனக் கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு பதில் அளிக்காமல் இதே கேள்வியை இரண்டு குழந்தைகள் கொண்ட கரணிடம் கரீனா திரும்பக் கேட்கிறார்.


என்ன கேள்வி இதெல்லாம்...


இதற்கு பதில் சொல்லாமல் கரண் ”என் அம்மா இந்த நிகழ்ச்சியைப் பார்ப்பார்” எனத் தவிர்க்கும் நிலையில், அமீர் கான் இடையே புகுந்து ”மற்றவர்களில் பாலியல் வாழ்க்கை பற்றி இந்த நிகழ்ச்சியில் பேசும்போது உங்கள் தாய் கண்டுகொள்ள மாட்டாரா? என்ன கேள்விகள் இதெல்லாம்?” என பளிச்சென்று அவரைக் கலாய்த்து மடக்குகிறார்.


 






தொடர்ந்து ரகளையான கேள்விகளை அமீர் கான் எழுப்பும் வகையில் இந்த ப்ரொமோ அமைந்துள்ள நிலையில், தங்கள் நீண்ட நாள் ஆசையை அமீர் நிறைவேற்றியுள்ளதாக நெட்டிசன்களை அமீர் கானை புகழ்ந்து கமெண்ட் செக்‌ஷனில் களமாடி வருகின்றனர்.