தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தின் பிற்பகுதியில் ஒரு அசைக்க முடியாத ஒரு நடிகையாக ரசிகர்களின் மனங்களில் சிம்மாசனம் போட்டு கம்பீரமாக அமர்ந்தவர் நடிகை சிம்ரன். இன்றைய இளம் நடிகைககள் பலருக்கும் ரோல் மாடலாக இருக்கும் சிம்ரன் மும்பையை பூர்வீகமாக கொண்டவர்.


மாடலிங் துறையில் மிகுந்த ஆர்வம் கொண்ட சிம்ரனுக்கு அதன் மூலம் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. 1995ம் ஆண்டு வெளியான 'சனம் ஹர்ஜாய்' திரைப்படம் மூலம் இந்தி திரையுலகில் அறிமுகமானார். வசந்த் இயக்கத்தில் வெளியான 'நேருக்கு நேர்' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.


 



டஃப் டான்ஸர் :


அழகில் மட்டுமின்றி நடிப்பு, நடனம், திறமை என அனைத்திலுமே சிறந்த ஒரு பெர்ஃபார்மராக வலம் வந்தார். எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை மிகவும் அற்புதமாக நடித்து அந்த கேரக்டருக்கு வெயிட்டேஜ் கொடுப்பதில் திறமையானவர் சிம்ரன். எந்த அளவிற்கு அவர் கலக்கலாக நடிப்பாரா அதே அளவுக்கு சிறப்பாக நடனமாடக்கூடியவர். நடிகர்களுக்கே டஃப் கொடுக்கும் அளவுக்கு ஸ்பீட்டாக டான்ஸ் ஆட கூடியவர். இப்படி பல பெருமைகளையும் பெற்ற சிம்ரனுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இன்றளவும் உள்ளது.
திருமணத்திற்கு பிறகு நடிப்பில் இருந்து சிறிது காலம் பிரேக் எடுத்துக்கொண்ட சிம்ரன் 2008ம் ஆண்டு வாரணம் ஆயிரம் படம் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். ஹீரோயினாக நாம் பார்த்த சிம்ரன் தற்போது வில்லி கதாபாத்திரங்களில் கூட பின்னி பெடெலெடுக்கிறார்.   


சொத்து மதிப்பு :


இன்று தனது 48வது பிறந்தநாளை கொண்டாடும் சிம்ரன் சொத்து மதிப்பு குறித்த விவரங்களை தெரிந்து கொள்ளலாம். 


 



தனது சொந்த ஊரான மும்பையில் ஆடம்பர பங்களா, சென்னையில் சொகுசு வீடு,  கோயம்புத்தூரில் பெரிய பண்ணை வீடு வைத்துள்ளார் என கூறப்படுகிறது. பிஎம் டபிள்யு X5, ஆடி Q7 உள்ளிட்ட லேட்டஸ்ட் காஸ்ட்லி மாடல் கார்களை வைத்துள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. பல கோடி ரூபாய் மதிப்பிலான ஏராளமான தங்கம் மற்றும் வைர நகைகளை வைத்துள்ளார் என கூறப்படுகிறது.


ஒரு படத்தில் நடிக்க சம்பளமாக 50 முதல் 60 லட்சம் பெறுகிறார் . அது தவிர சில விளம்பரங்களிலும் நடித்து வருகிறார். ரியாலிட்டி ஷோக்களின் நடுவராகவும் வருமானத்தை ஈட்டி வருகிறார்.  நடிப்பு மூலம் ஒரு இருக்க மறுபக்கம் தொழில் அதிபராகவும் கலக்கி வருகிறார் சிம்ரன். அவருக்கு என சொந்தமாக ஹோட்டல் ஒன்று இருப்பதாக கூறப்படுகிறது. ஒட்டுமொத்தமாக அவரின் நிகர சொத்து மதிப்பு 20 கோடி ரூபாய் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.