என்னோட சமையலிலேயே ஸ்டாலின் uncle க்கு பிரியாணி தான் பிடிக்கும் எனவும், ஆனா இத பிரியாணின்னு சொல்லாத புலாவ்னு சொல்லுன்னு உதயநிதி என்னைக் கலாய்ப்பார் என்கிறார் கிருத்திகா உதயநிதி.


கலைஞர் கருணாநிதி குடும்பத்தின் மருமகளாகவும், இளம் அரசியல் வாதியும் நடிகருமான உதயநிதி ஸ்டாலினின் காதல் மனைவியான  கிருத்திகா, தமிழில் வணக்கம் சென்னை திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார்.  விஜய் ஆண்டனியை வைத்து காளி படத்தை இயக்கியப்போதும் அந்தளவிற்கு ரீச் ஆகவில்லை. இதனையடுத்து தொடர்ந்து பல படங்களை இயக்கிய கிருத்திகா வெப்சீரிஸ், வைரமுத்துவின் புரோஜெட் போன்றவற்றில் பிஸியாக இருந்து வருகிறார். திரைத்துறையில் கவனம் செலுத்துவதோடு தனது குடும்ப வாழ்க்கையையும் நேர்த்தியாக நடத்திவருகிறார். உதயநிதி – கிருத்திகாவின் மகன் இன்பன் உதயநிதி விளையாட்டில் அதிக ஆர்வம் காட்டிவரும் நிலையில், அவருக்கு பல்வேறு வழிகாட்டுதலை வழங்கிவருகிறார் கிருத்திகா.



இப்படி திரைத்துறை, குடும்ப வாழ்க்கை, பொதுவாழ்க்கை என அனைத்திலும் பிஸியாக இருக்கும் இவருக்கு இதுவரை சமையில் வெறும் 5 டிஸ் மட்டும் தான் செய்யத்தெரியும் எனவும், இதனையும் அவர் ஏற்கனவே எழுதிவைத்துள்ள சமையல் குறிப்பு நோட்டில் இருந்து தான் பார்த்துச்செய்வேன் எனவும் பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். மேலும் கொரோனா சமயத்தில் வீட்டில் பல பெண்களுக்கு சமையல் செய்வது தான் பெரிய வேலையாக இருந்தது. இதோ என்ன விதவிதமாக செய்யலாம்னு செஞ்சி வீட்டில் உள்ளவர்களுக்கு கொடுத்து மகிழ்ந்தார்கள். சொல்லப்போனால் லாக் டவுன் சமயத்தில் குக்கிங் தான் எல்லோருக்கும் ரெம்ப ரிலாக்ஸ இருந்தது. அப்படித் தான் நானும் இருந்தேன் எனவும், அந்த சமயத்தில புதுவிதமாக சமைக்க கத்துக்கிட்டேன் என்றார்.


இப்படித்தான் கடந்த ஒராண்டுக்கு முன்பாக நான் சமையல் அறையில் இருந்தப்போது, என்னோட பையன் வந்து உங்களுக்கு இங்க என்ன வேலை என்று கேட்டதை என்னால் மறக்கவே முடியாது என்கிறார். மேலும் நான் வெஜ் மற்றும் நான் வெஜ் பிரியாணி இரண்டுமே நல்லா செய்வேன். இதல வெஜ் பிரியாணி தான் அதிகமாக செய்வேன் என்று தெரிவிக்கும் கிருத்திகா, ஸ்டாலின் அங்கிளுக்கு நான் செய்யும் பிரியாணி தான் ரொம்ப பிடிக்கும். ஆனால் உதயநிதி நான் செய்ற பிரியாணிய ரொம்ப கலாய்ப்பாரு..“ நீ இத பிரியாணின்னு சொல்லாத புலாவ்னு சொல்லு, கடையில வாங்கி சாப்பிடுறது தான் பிரியாணி" என்று கூறுவார். இதெல்லாம் நான் கண்டுக்கொள்ள மாட்டேன், நான் பிரியாணி நல்லா செய்றேன்ற பெருமை எனக்கு என்கிறார் கிருத்திகா.



அந்த பேட்டியில், எங்கள் வீட்டில் நாங்கள் இளமையாக இருப்பதற்கு காரணம் என்னோட அத்தையின் ஹெல்த் கான்சியஸ் தான். இட்லி, தோசை போன்ற டிபன் செய்தாலும் சாதாரண மாவைப்போன்று இல்லாமல் ப்ரவுன் ரைஸ், ராகி தோசை, முடக்கத்தான் கீரை தோசை என உடலுக்கு  ஆரோக்கியம் அளிக்கும் உணவைத்தான் எங்களுக்கு தருவார். இதைத்தான் இப்பவும் நாங்க வீட்ல செய்கிறோம். இதோடு யோகா செய்வது, ஜிம்மிற்கு செல்வது, விளையாட்டு போன்றவற்றில் அதிக ஆர்வம் காட்டுவதும் ஹெல்த்த நல்லா பாத்துக்கிறதுக்கு உதவியாக இருக்கிறது என்கிறார் உதயநிதியின் காதல் மனைவி கிருத்திகா உதயநிதி ஸ்டாலின்.