வீட்டில் என் கிட்ட யாருமே அரசியல் பேசமாட்டாங்க என்று கூறியுள்ளார் முதல்வர் ஸ்டாலினின் மருமகளும் உதயநிதி ஸ்டாலினின் மனைவியுமான கிருத்திகா.


கலைஞர் கருணாநிதி குடும்பத்தின் மருமகளாகவும், இளம் அரசியல் வாதியும் நடிகருமான உதயநிதி ஸ்டாலினின் காதல் மனைவியான  கிருத்திகா, தமிழில் வணக்கம் சென்னை திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார்.  விஜய் ஆண்டனியை வைத்து காளி படத்தை இயக்கியப்போதும் அந்தளவிற்கு ரீச் ஆகவில்லை. இதனையடுத்து தொடர்ந்து பல படங்களை இயக்கிய கிருத்திகா வெப்சீரிஸ், வைரமுத்துவின் புரோஜெட் போன்றவற்றில் பிஸியாக இருந்து வருகிறார். திரைத்துறையில் கவனம் செலுத்துவதோடு தனது குடும்ப வாழ்க்கையையும் நேர்த்தியாக நடத்திவருகிறார். உதயநிதி – கிருத்திகாவின் மகன் இன்பன் உதயநிதி விளையாட்டில் அதிக ஆர்வம் காட்டிவரும் நிலையில், அவருக்கு பல்வேறு வழிகாட்டுதலை வழங்கிவருகிறார் கிருத்திகா.


கிருத்திகாவும் உதயநிதியும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. தனது காதல் தொடங்கி இப்போதைய இயக்குநர் வாழ்க்கை வரை பல விஷயங்களையும் மனம் திறந்து பேசியுள்ளார் கிருத்திகா.


அவர் பேட்டியில் இருந்து:
எனக்கு உதயநிதியை 17 வயதில் இருந்தே தெரியும். அப்போது இருந்தே எங்களுக்குள் ஏதாவது சண்டை என்றால் மகேஷ் தான் அதை சரி செய்து வைப்பார். நாங்கள் மூவருமே ஃப்ர்ண்ட்ஸா தான் வளர்ந்தோம். அப்போ நாங்க இருந்ததையும் இப்போ நாங்கள் ஒருவரும் இருக்கும் நிலையையும் என்னால் நம்பவே முடியவில்லை. மகேஷ் அமைச்சர், உதய் எம்.எல்.ஏ., நான் இயக்குநர் இதெல்லாம் நினைத்ததே இல்லை. ஆனால் நல்லாயிருக்கு.


உதய் அரசியல், சினிமா என்று பிஸியாக இருந்தாலும் எங்களுக்கான நேரத்தையும் மேனேஜ் செய்கிறார். என்னதான் அரசியல் பின்னணியில் இருந்து வந்தாலும் அவர் அடைந்துள்ள இடத்தை அடைவதற்கு நிறைய சவால்கள் இருந்தன. அவர் முதன்முதலில் சட்டசபையில் பேசியது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.


நாங்கள் எல்லோரும் வீட்டில் சும்மாவே இருப்பதே எங்களுக்கு சிறந்த நேரம். சும்மா இருக்கிறதைத் தான் நாங்கள் ரொம்ப விரும்புகிறேன்.


இவ்வாறு அந்தப் பேட்டியில் கிருத்திகா உதயநிதி கூறியுள்ளார்.


திரைத்துறை, குடும்ப வாழ்க்கை, பொதுவாழ்க்கை என அனைத்திலும் பிஸியாக இருக்கும் இவருக்கு இதுவரை சமையில் வெறும் 5 டிஸ் மட்டும் தான் செய்யத்தெரியும் எனவும், இதனையும் அவர் ஏற்கனவே எழுதிவைத்துள்ள சமையல் குறிப்பு நோட்டில் இருந்து தான் பார்த்துச்செய்வேன் எனவும் பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


அதேபோல், அரசியலுக்கு வரும் எண்ணம் தனக்கு இல்லை என்று திரைப்பட இயக்குநர் கிருத்திகா உதயநிதி தெரிவித்தது கவனிக்கத்தக்கது. வழக்கமாகத் திரைப்பட விழா மேடைகளில் வரும் கிருத்திகா உதயநிதி, சமீபத்தில் பொது நிகழ்ச்சி ஒன்றில் பங்குகொண்டதால் எழுந்த இந்தக் கேள்விக்குப் பதிலளிக்கும் விதமாக கிருத்திகா உதயநிதி இவ்வாறு தெரிவித்திருந்தார். வீட்டில் தன்னிடம் யாருமே அரசியல் பற்றி பேசவே மாட்டார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.