மாஸ் நாயகன் என கொண்டாடப்படும் கே.ஜி.எஃப் நாயகன் யஷ் சமீபத்தில் கலந்துக்கொண்ட நேர்காணாலில் முன்வைக்கப்பட்ட சில சுவாரஸ்ய கேள்விகளுக்கு எளிமையாகவும் , நேர்த்தியாகவும் பதிலளித்திருக்கிறார். அதனை ஒரு தொகுப்பாக கீழே காணலாம் .




 


இதுவரையில் உங்களுக்கு கிடைத்த சிறந்த அறிவுரை என்ன ? 


எனக்கு யாரும் பொதுவா அறிவுரை சொல்ல மாட்டாங்க. ஒரு முறை என்னுடைய ஒளிப்பதிவாளர் ஒருவர் , ஒவ்வொரு முறை நீ ஷூட்டிங்கிற்கு செல்லும் பொழுதும் போருக்கு செல்வது போல நினைத்துக்கொள் , ஏனென்றால் இந்த உலகம் உனது திட்டத்தை நொறுக்க காத்திருக்கும் என்றார். அது ரியாலிட்டி என நான் நினைக்கிறேன்.



ராக்கிங்  ஸ்டார் என பட்டம் இல்லாமல் வேறு ஏதாவது உங்களுக்கு பட்டம் கொடுக்க விரும்பினால் என்னவாக இருக்கும் ?


”விஷ்வமானவ தேசே “ இதோட அர்த்தம் என்னவென்றால் உலகத்திலேயே நம்பிக்கைக்குரியவர் அல்லது மனிதம் உடையவர்னு சொல்லலாம்.


முதன் முதலாக நீங்கள் பார்த்த படம் எது என நினைவிருக்கிறதா ?


நான் இரண்டு வயது முதலே சினிமா பார்ப்பேன். எனது பெற்றோர்கள் அடிக்கடி அழைத்து செல்வார்கள். எனக்கு நினைவில்லை . ஆனால்அந்த சின்ன வயதில்  படம் பிடிக்கவில்லை என ஒருமுறை  கையில் வைத்திருக்கும் வாழைப்பழத்தை தூக்கி  ஸ்கிரீனை நோக்கி வீசியது நினைவிருக்கிறது.  ஆமாம்! நாங்கள் வாழைப்பழம் , திண்பண்டம் எல்லாம் வீட்டிலிருந்து எடுத்து செல்வோம். நாங்க அந்த சமயத்தில் மிடில் கிளாஸ் ஃபேமிலிதான்.


எத்தனை முறை உங்களது தந்தையை பஸ் டிரைவர் வேலையை விட்டு வர சொல்லியிருப்பீங்க ?


நான் சொல்லியிருக்கேன். ஆனால் அவரை கட்டாயப்படுத்தியது கிடையாது. ஏன்னா அவருக்கு அந்த வேலை செய்ய பிடித்திருந்தது. அந்த வேலை செய்துதான் எங்களை காப்பாற்றினார். நான் ஒரு முறை அவர் கஷ்டப்படக்கூடாதுனு , வேலையை விட சொல்லியிருக்கேன். ஆனா அவர் அதை செய்யலை . நீ நடிகனாக மாறியதால வேலைய விட முடியுமா? எனக்கு இந்த வேலை எப்போ பிடிக்காம போகுதோ அப்போ நான் விட்டுட்டு வெளியே வருவேன்னு சொன்னாரு. ஆமா ! என் அப்பாவின் குணம்தான் எனக்கும், எங்களுக்கு பிடிச்ச வேலைய நாங்க  இஷ்டப்பட்டுதானே செய்யுறோம்னு புரிஞ்சது. எனது சகோதரிக்கு ஆண் குழந்தை பிறந்தது. அதன் பிறகு குழந்தையோடு நேரம் செலவிடனும்னு சொல்லி, ரிட்டைர்மெண்ட் வாங்கினாரு. எங்க அப்பா லாரி டிரைவரா இருந்து அரசு டிரைவரா மாறினாரு. அது அவர் செய்த சாதனையாத்தான் நான் பார்க்குறேன். எல்லோராலும் அதை பண்ண முடியுமா!


நீங்கள் திரையில் செய்த பிழைகளை நீங்களே பார்த்து உணர்ந்திருக்கிறீர்களா ?


நிச்சயமாக ! எல்லா நடிகர்களுமே அதை செய்வாங்கன்னு நான் நினைக்கிறேன். நாம நமது பிழைகளை திரையில் பார்த்து திருத்திக்கொள்ளாமல் , நாம  அருமையா நடிச்சிருக்கோமேனு நினைச்சா அப்போதான் பிரச்சினையே தொடங்குதுனு அர்த்தம் 


 


courtesy : galatta plus