KGF 2 Box Office: வசூல் சாதனை படைக்கும் ராக்கி பாய்.. கே.ஜி.எஃப் 2-வின் 4 நாள் வசூலின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

KGF 2 Box Office Collection Day 4: யஷ் நடிப்பில் கடந்த 14 ஆம் தேதி வெளியான கே.ஜி.எஃப் 2 திரைப்படம் உலகளவில் எவ்வளவு வசூலித்துள்ளது என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Continues below advertisement

யஷ் நடிப்பில் கடந்த 14 ஆம் தேதி வெளியான கே.ஜி.எஃப் 2 திரைப்படம் உலகளவில் 546 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக பட தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. 

Continues below advertisement

 

நடிகர் யஷ் நடிப்பில் கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியான திரைப்படம் கே.ஜி.எஃப் 2. படம் வெளியான நாளிலிருந்தே படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான இந்தப்படத்தில் வில்லனாக பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடித்துள்ளார். கதாநாயகியாக ஸ்ரீநிதி ஷெட்டி, ரவீனா டண்டன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

 

புவுனா கெளடா ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப்படத்திற்கு ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ளார். 19 வயதே ஆன உஜ்வல் குல்கர்னி படத்தொகுப்பு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. பீஸ்ட் படத்திற்கு போட்டியாக விடப்பட்ட இந்தப் படம் அதை விட வரவேற்பை பெற்றுள்ளதால் திரையரங்க உரிமையாளர்கள் கே.ஜி.எஃப் 2 படத்திற்கு அதிக காட்சிகளை ஒதுக்க முன்வந்துள்ளனர்.

முன்னதாக படம் வெளியான அன்றைய தினம் படம் 134 கோடி ரூபாயும், இரண்டு நாட்களில் 240 கோடி ரூபாய் வசுலித்தது குறிப்பிடத்தக்கது. 

 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

Continues below advertisement