சர்வதேச அளவில் மிக பெரிய கவனத்தை ஈர்த்த படம் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான ’கேஜிஎஃப்’. இதில் ஒரு தொலைக்காட்சி நிபுணராக நடித்திருந்தவர் மாளவிகா. நடிகர் யாஷ் (ராக்கி) குறித்து விவரிக்கும் போது மாளவிகா கொடுக்கும் ரியாக்ஷன் தான் கேஜிஎஃப் படத்தின் ஒரு ஹைலைட். சண்டை காட்சிகள் நிறைந்த அதிரடி ஆக்ஷன் திரைப்படத்தில், அந்த திரைக்கதையை நகர்த்தி எடுத்து சென்று மக்களுக்கு அழகாக ’ரொம்ப பின்னாடி போய்ட்டீங்க… இன்னும் கொஞ்சம் முன்னாடி வாங்க’ என்று மாளவிகா அவினாஷ் சொல்வதும் படத்தின் வோல்ட்டேஜை அதிகரிக்கும்.
கேஜிஎஃப் முதல் பாகம் முடியும் போதே இரண்டாவது பாகத்தின் லீட் உடன் அது முடிவடைந்திருக்கும். இந்நிலையில் மாபெரும் வெற்றி படமாக அமைந்த கேஜிஎஃப் முதல் பாகத்தை தொடர்ந்து, தற்போது இரண்டாம் பாகமும் தயாராகி வருகிறது. இதில் படப்பிடிப்பு காட்சிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த படத்திற்கான டப்பிங் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. வரும் ஜூலை 16 ஆம் தேதி கேஜிஎஃப் படத்தின் இரண்டாவது பாகம் வெளியாகிறது.
இந்நிலையில் படத்திற்காக டப்பிங் பணிகளை தொடங்கி விட்டதாக தனது டிவிட்டர் பக்கத்தில் மாளவிகா பதிவிட்டுள்ளார். அதில் ’50 நாட்களுக்குப்பிறகு மீண்டும் கேஜிஎஃப் 2 டப்பிங் பணிக்கு திரும்பியிருக்கிறேன்’ என்று உற்சாகத்துடன் பதிவிட்டுள்ளார் மாளவிகா அவினாஷ்.