தி கேரளா ஸ்டோரி படத்திற்கு தேசிய விருது கிடைத்துள்ள நிலையில் விருது குழுவினர் கேரளாவை அவமதித்துள்ளது என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் காட்டாமாக பதிவிட்டுள்ளார். 

தேசிய விருதுகள்:

2023ஆம் ஆண்டு வெளியாகிய திரைப்படங்களுக்கு வழங்கப்படும் 71வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று (ஆக.1) அறிவிக்கப்பட்டன. இதில் பல்வேறு பிரிவுகளில் திரைப்படங்கள் மற்றும் நடிகர்கள் விருதுகள் பெற்றுள்ளனர். 

இந்த விருதுகளில் சர்ச்சைக்குரிய ‘தி கேரளா ஸ்டோரி’ படத்துக்கு தேசிய விருது வழங்கப்பட்டுள்ள நிலையில் தற்போது அது பெரும் விமர்சனங்களை கிளப்பியுள்ளது. குறிப்பாக, இந்த படத்திற்கு விருது வழங்கியதை கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் கடுமையாக கண்டித்துள்ளார்.

தி கேரளா ஸ்டோரி:

முஸ்லிம் சமூகத்தை தவறான முறையில் சித்தரிக்கும் வகையில் இந்த படம் தயாரிக்கப்பட்டதாக கடந்த ஆண்டு பட வெளியீட்டின் போது அப்போது ஆட்சியில் இருந்த மார்க்ஸிட் கம்யூனிஸ்ட் மற்றும் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் செய்தனர். மாநிலத்தின் மதச்சார்பற்ற முகமையையும், சமூக ஒற்றுமையையும் பாதிக்கும் விதத்தில் படம் உருவாக்கப்பட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்தன.

பினராயி விஜயன் பதிவு:

ரளா ஸ்டோரி படத்திற்கு தேசிய விருது கிடைத்துள்ள நிலையில் விருது குழுவினரை கண்டித்து அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் காட்டாமாக பதிவிட்டுள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் கேரளாவின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் மற்றும் வகுப்புவாத வெறுப்பு விதைகளை விதைக்கும் தெளிவான நோக்கத்துடன் அப்பட்டமான தவறான தகவல்களைப் பரப்பும் ஒரு திரைப்படத்தை கௌரவிப்பதன் மூலம், தேசிய விருதுகள் நடுவர் குழு , சங்க பரிவாரின் பிளவுபடுத்தும் சித்தாந்தத்தில் வேரூன்றிய ஒரு கதைக்கு சட்டப்பூர்வ அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.

வகுப்புவாத சக்திகளுக்கு எதிராக எப்போதும் நல்லிணக்கம் மற்றும் எதிர்ப்பின் கலங்கரை விளக்கமாக நிற்கும் நிலமான கேரளா, இந்த முடிவால் கடுமையாக அவமதிக்கப்பட்டுள்ளது. மலையாளிகள் மட்டுமல்ல, ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட அனைவரும், உண்மை மற்றும் நாம் மதிக்கும் அரசியலமைப்பு மதிப்புகளைப் பாதுகாக்க தங்கள் குரலை எழுப்ப வேண்டும் என்று தனது பதிவில் கண்டனத்தை தெரிவித்துள்ளார்