அண்மையில் ரவி மோகன் மற்றும் கெனிஷா கேரளாவில் கோவில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார்கள். இந்த நிகழ்வில் கெனிஷா மேடையில் பாடினார். பாட செல்வதற்கு முன் அவர் ரவி மோகனின் காலைத் தொட்டு ஆசிர்வாதம் பெற்றது ரசிகர்களிடம் பேசுபொருளாகியுள்ளது . ரவி மோகன் மற்றும் கெனிஷா இணைந்து குணா படத்தில் கண்மனி அன்போடு பாடலை பாடினார்கள். இந்த வீடியோவை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் ட்ரோல் செய்து வருகிறார்கள்.

Continues below advertisement

நடிகர் ரவி மோகன் மனைவி ஆர்த்தியுடனான விவாகரத்தை அறிவித்த பிறகு தனியாக வசித்து வருகிறார். விவாகரத்து வழக்கு விசாரணையில் இருந்து வரும் நிலையில் பின்னணி பாடகி கெனிஷாவுடன் ரவி மோகன் அடிக்கடி காணப்படுகிறார். ரவி மோகனின் தயாரிப்பு நிறுவனமான ரவி மோகன் ஸ்டுடியோஸில் கெனிஷா முக்கிய பங்கு வகித்து வருகிறார். இருவரும் தங்களது உறவு குறித்து வெளிப்படையாக பேசியதில்லை. ஆனால் இருவரும் ஆன்மிக ஸ்தலங்களுக்கு ஒன்றாக செல்வது , சினிமா நிகழ்ச்சிகளில் ஜோடியாக கலந்துகொள்வது என எல்லா இடத்திலும் சேர்ந்தே காணப்படுகிறார்கள். 

Continues below advertisement

கேரளாவில் மீன்குளத்தி பகவதி அம்மன் கோவில் திருவிழாவிற்கு சென்றிருந்தார்கள். இந்த நிகழ்ச்சியில் கெனிஷா மேடையில் பாடல்களை பாடினார். அப்போது மேடையில் பாட செல்வதற்கு முன் முன் வரிசையில் அமர்ந்திருந்த ரவி மோகன் காலில் கெனிஷா விழுந்தார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரவி மோகன் உடன் இணந்த புகைப்படத்தை கெனிஷா வெளியிட்டார்.