கென் கருணாஸ் இயக்கி நடித்த யூத் திரைப்படம் கடந்த மார்ச் மாதம் திரையரங்குகளில் வெளியாகி வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றிபெற்றது. உலகலளவில் இப்படம் ரூ62 கோடி வசூலித்ததாக படக்குழு அதிகாரப்பூர்வ தகவல் வெளியிட்டது.  திரையரங்கைத் தொடர்ந்து தற்போது இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

Continues below advertisement

பார்வதா என்டர்மெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் கருப்பையா சி. ராம் தயாரிப்பில்,   கென் கருணாஸ் நாயகனாக நடித்து இயக்க, பள்ளி பருவ வாழ்க்கையை மையமாக கொண்டு கடந்த மார்ச் 19-ஆம் தேதி  வெளியான “யூத்” திரைப்படம். சுராஜ் வெஞ்சாரமூடு ,தேவதர்ஷினி , அனிஷ்மா அனில் குமார், மீனாட்சி தினேஷ், பிரியன்யான்ஷி யாதவ் ஆகியோர் இந்த படத்தில் நடித்துள்ளார்கள். ஜிவி பிரகாஷ் படத்திற்கு இசையமைத்துள்ளார். 

Continues below advertisement

நடிகர் கருணாஸின் மகனான கென் கருணாஸ் ரகளபுரம் திரைப்பத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அசுரன் படத்தில் தனுஷின் மகனாக நடித்து பரவலாக கவனமீர்த்தார். இப்படியான நிலையில் யூத் படத்தை இயக்கி அவரே நாயகனாக நடித்திருந்தார். இந்த படம் வெற்றிபெறுமா என பல சந்தேகங்கள் இருந்த நிலையில் யூத் திரைப்படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றிபெற்றது. ஒரு இளைஞனின்  பள்ளி பருவத்தை வாழ்க்கையை நகைச்சுவை மற்றும் செண்டிமெண்ட் கலந்து இப்படத்தில் சொல்லியிருந்த விதம் ரசிகர்களை கவர்ந்தது. 

யூத் ஓடிடி ரிலீஸ் 

திரையரங்கத்தைத் தொடர்ந்து தற்போது யூத் திரைப்படம் ஓடிடியில் வெளியாக இருக்கிறது. வரும் ஏப்ரல் 16 ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் இப்படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.