மஞ்சணத்தி படத்தில் கயடு லோஹர்! மீண்டும் கிளம்பிய நிற சர்ச்சை
இயக்குநர் மாரி செல்வராஜின் மஞ்சணத்தி படத்தில் கயடு லோஹர் நடிக்கும் அறிவிப்பு வெளியாகி மீண்டும் வெள்ளை நிற நடிகைகள் குறித்த சர்ச்சையை கிளப்பியுள்ளது

பைசன் படத்தின் போது வெள்ளை நடிகைக்கு கருப்பு நிற மேக்அப் போட்டது நடிக்க வைத்தது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தனது அடுத்த படத்திலும் பிரியங்கா மோகன் மற்றும் கயடு லோஹர் என இரு நடிகைகளை இயக்கவிருக்கிறார் மாரி செல்வராஜ்
தலித் திரைப்பட இயக்குநர்களின் படங்கள் மீது மற்ற கமர்சியல் படங்களைக் காட்டிலும் கொஞ்சம் கராரான விமர்சன போக்கு இருந்து வருகிறது தான். அந்த வகையில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வசூல் வெற்றிபெற்ற பைசன் படமும் விமர்சனத்திற்கு உள்ளானது. இப்படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமாவிற்கு மேக் போட்டு கருப்பாக காட்டியிருந்தது பரவலாக விமர்சனங்களை எதிர்கொண்டது. ஏன் மாரி செல்வராஜ் ஒரு கருப்பு நிற நடிகைகளுக்கு வாய்ப்பளிக்கவில்லை என்கிற பரவகாக எழுப்பப்பட்டது
தனது படத்திற்கு முழு அர்ப்பனிப்பை வழங்க தயாராக இருக்கும் கலைஞர்களையே தான் தேர்வு செய்வதாக மாரி செல்வராஜ் பதில் கூறியிருந்தார். மாற்றுத்திறனாளி கதாபாத்திரத்தில் நிஜ மாற்றுத்திறனாளியவா நடிக்க வைக்க முடியும் என்று அவரது கருத்து இந்த சர்ச்சையை மேலும் வலுப்படுத்தியது. தற்போது மாரி செல்வராஜின் அடுத்த படமான மஞ்சணத்தி படத்தின் அறிவிப்பு அதே நிற சர்ச்சையை மீண்டும் தொடங்கியுள்ளது. இப்படத்தில் கயடு லோஹர் , பிரியங்கா மோகன் ஆகிய இரு நடிகைகள் நடிக்க இருக்கிறார்கள்.
கயடு லோஹர் குறித்து மாரி செல்வராஜ்
இப்படத்தின் நாயகி கதாபாத்திரத்திற்காக டெஸ்ட் ஷூட் செய்தபோது கயடு லோஹரின் நடிப்பு தன்னை கவர்ந்ததால் அவரை இந்த கதாபாத்திரத்திற்கு தேர்வு செய்ததாக மாரி செல்வராஜ் கூறியுள்ளார். இந்த கதாபாத்திரம் நிச்சயம் அவருக்கு பெரியளவில் அங்கீகாரம் வழங்கித் தரும் என இயக்குநர் நம்புவதாக கூறப்படுகிறது.
இன்னொரு பக்கம் கடந்த படத்தில் விமர்சனங்களை சந்தித்தப் பின்னரும் மாரி செல்வராஜ் தனது அடுத்த படத்தில் இரு நடிகளைகளை இயக்கவிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மஞ்சணத்தி குறித்து
மாரி செல்வராஜின் 6 ஆவது படமாக உருவாக இருக்கிறது மஞ்சணத்தில் . வாழைத் திரைப்படத்தைத் தொடர்ந்து தனது நவ்வி ஸ்டுடியோஸ் சார்பில் இந்த படத்தை திவ்யா மாரி செல்வராஜ் தயாரிக்கிறார். பைசன் படத்தைத் தொடர்ந்து தனுஷ் நடிப்பில் பிரம்மாண்ட வரலாற்று திரைப்படத்தை மாரி இயக்கவிருந்தார். அப்படத்திற்கு இன்னும் கூடுதல் பட்ஜெட் மற்றும் காலம் தேவைப்படுவதால் மஞ்சணத்தி படத்தை இயக்கவுள்ளார் மாரி செல்வராஜ்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















