பிளடி பெக்கர் படத்திற்கு அடுத்தபடியாக கவின் நடித்துள்ள ஃபேண்டஸி ரொமாண்டிக் காமெடி திரைப்படம் 'கிஸ்'. இப்படத்தை தேசிய விருது வென்ற நடன இயக்குநர் சதீஷ் கிருஷ்ணன் இயக்கியுள்ளார். அயோத்தி பட நடிகை ப்ரீத்தி அஸ்ராணி நாயகியாக நடித்துள்ளார். பிரபு , விடிவி கணேஷ் , ஆர் ஜே விஜய் , தேவயானி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். ஜென் மார்டின் இசையமைத்துள்ளார். கிஸ் திரைப்படம் எப்படி இருக்கிறது , படம் பார்த்த ரசிகர்கள் சமூக வலைதளத்தில் கிஸ் படத்திற்கு என்ன விமர்சனம் வழங்கியிருக்கிறார்கள் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்
கவினின் 'கிஸ்' திரைப்பட விமர்சனம்
நாயகனான கவினுக்கு ஒரு சக்தி இருக்கிறது. காதலர்கள் முத்தம் கொடுத்துக் கொள்வதைப் பார்த்தால் அதன் பிறகு அவர்களின் எதிர்காலத்தை பார்க்கக் கூடியவராக இருக்கிறார். இந்த சக்தி கவினின் காதல் வாழ்க்கைக்கு பிரச்சனையாக உருவாகிறது. தன்னுடைய காதலை காப்பாற்றிக் கொள்ள கவின் தனது விதியை எதிர்த்து போராட வேண்டும் .
"மொத்த படத்தையும் கவின் தனது நடிப்பால் தாங்கியிருக்கிறார். நடிப்பு , ஆக்ஷன் காட்சிகள் என ஒரு முழுமையான நடிகராக கவின் நடித்துள்ளார். ஜென் மார்டினின் இசை படத்திற்கு ஒரு புதிய வைப் சேர்த்திருக்கிறது . படத்தின் ஓப்பனிங் காட்சி , இடைவேளை மற்றும் பாடல்களில் நடன காட்சிகள் சிறப்பாக அமைந்துள்ளன. படத்தில் ஒரு நல்ல ஃபேண்டஸி அம்சம் இருந்தாலும் கிஸ் ஒரு சுமாரான படம் " என பிரபல எஸ்க் விமர்சகர் ஒருவர் தெரிவித்துள்ளார்