விகர்ணன் அசோக் இயக்கத்தில் கவின் , ஆண்ட்ரியா இணைந்து நடித்துள்ள படம் மாஸ் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ஆண்ட்ரியா இப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாகிறார். ஜிவி பிரகாஷ் படத்திற்கு இசையமைத்துள்ளார். கவின் நடித்த கடைசியாக வெளியான பிளடி பெக்கர் மற்றும் கிஸ் ஆகிய இரு படங்கள் வசூல் ரீதியாக பெரியளவில் வரவேற்பைப் பெறவில்லை. இப்படியான நிலையில் மாஸ்க் திரைப்படம் அவருக்கு தேவையான கமர்சியல் வெற்றியை கொடுத்ததா ? தயாரிப்பாளராக ஆண்ட்ரியா வெற்றிபெற்றாரா ? மாஸ் படத்தை பார்த்த ரசிகர்கள் படம் பற்றி என்ன சொல்லியிருக்கிறார்கள் என பார்க்கலாம்.
மாஸ்க் திரைப்பட விமர்சனம்
மற்றுமொரு வித்தியாசமான கதைக்களத்தில் கவின் நடித்துள்ளார். படத்தின் தொடக்கத்திலேயே கவின் மற்றும் ஆன்ட்ரியாவின் கதாபாத்திரம் பற்றி விரிவாக சொல்லப்படுகிறது. முதல் பாதி நெல்சன் பாணியிலான டார்க் காமெடியுடன் நிதானமாக நகர்கிறது கதை. இடைவேளை காட்சி தொடங்கி க்ளைமேக்ஸ் வரை படம் விறுவிறுப்பாகிறது.