காயத்துடன் காணப்படும் சம்யுக்தாவின் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன.


சம்யுக்தா விஸ்வநாதன்


சமீபத்தில் வெளியாகி இளைஞர்களிடம் பெரும் வைரலான பாடல் ‘கட்சி சேர’. பாடகர்கள் திப்பு மற்றும் ஹரிணி தம்பதியின் மகனான சாய் அபயங்கர் இந்தப் பாடலுக்கு இசையமைத்திருந்தார். தமிழ் மற்றும் தெலுங்குவில் ஒரு சில படங்களில் துணைக் கதாபாத்திரங்களில் நடித்த சம்யுக்தா விஸ்வநாதன் இந்தப் பாடலில் நடித்திருந்தார்.


கென் ராய்ஸ்சன் இந்தப் பாடலை இயக்கியிருந்தார் . இந்தப் பாடலில் சம்யுக்தாவின் டான்ஸ் மூவ்ஸ் அனைவராலும் ரசிக்கப்பட்டது. பாடல் மிகப்பெரிய ஹிட் ஆகிய நிலையில் சமூக வலைதளங்களில், யூடியூப் சானல் என எல்லா இடத்திலும் சம்யுக்தா வைரலானார். 


 


 






இந்நிலையில், விபத்து ஒன்றில் சிக்க தான் காயமடைந்திருப்பதாக சம்யுக்தா புகைப்படங்களை தன் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். சம்யுக்தா வெளியிட்டுள்ள இந்தப் புகைப்படங்களைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது ரசிகர்கள் இணையத்தில் அவருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.


இந்த புகைப்படத்துடன் நீண்ட பதிவு ஒன்றையும் பதிவிட்டுள்ளார் சம்யுக்தா. அதில் அவர் “ என்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கம் என்னுடைய வெற்றிகளை மட்டுமே பிரதிபலிக்கும் ஒன்றாக இருப்பதில் எனக்கு விருப்பமில்லை. அதில் என்னுடைய வாழ்க்கையின் நிகழும் உண்மையான மற்ற தருணங்களும் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஒவ்வொரு கட்டத்திலும் இந்த பிரபஞ்சம் நான் சிறிது நேரம் ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று எனக்கு நினைவுபடுத்திக் கொண்டே இருக்கிறது. முதலில் காலில் தசையில் காயம் ஏற்பட்டது அதைத் தொடர்ந்து கெண்டைக்காலில் சுலுக்கு . தற்போது மூக்கில் ஒரு சிறிய காயம் ஏற்பட்டிருக்கிறது. இந்த மாதிரியான தொழிலில் இருக்கும் ஒருவருக்கு மூக்கில் காயம் என்பது எவ்வளவு மன அழுத்தம் தரக்கூடியது என்பதை கற்பனை செய்து பாருங்கள். கொஞ்சம் வலி, கொஞ்சம் ரத்தம் , ஒரு சில ஊசிகள் மற்றும் நிறைய மாத்திரைகள் எடுத்துக் கொள்கிறேன். வலியைத் தாங்கும் சக்தி எனக்கு கொஞ்சம் அதிகம் என்பதால் சமாளித்துவிட்டேன். இப்போது கொஞ்சம் நன்றாக இருக்கிறேன் .ஒரு சில ப்ராஜக்ட்டில் நடிக்கும் வாய்ப்புகளை இழந்ததற்காக வருத்தப்பட்டேன். ஆனால் பரவாயில்லை வாழ்க்கையில் சில நல்ல தருணங்களும் சில கெட்ட தருணங்களும் இருக்கத்தான் செய்கின்றன. ஒவ்வொரு முறையும் கற்றுக் கொண்டு கொஞ்சம் ஒய்வெடுத்து மறுபடியும் வேலைக்கு திரும்பிச் செல்வதுதான் வழக்கம். 


எப்போது பெரிதுன் பாசம் காட்டாத என் பூனை நான் எப்போதெல்லாம் கொஞ்சம் சோர்வாக இருக்கிறேனோ அப்போது எல்லாம் என் பக்கத்திலேயே இருக்கிறது. அது எனக்கு கொடுக்கும் அன்பை இப்போதைக்கு அனுபவித்துக் கொண்டு இருக்கப் போகிறேன். உங்கள் வாழ்க்கையில் ஒரு கஷ்டமான சூழலை  நீங்கள் கடந்துகொண்டிருக்கிறீர்கள் என்றால் நீங்கள் தனியாக இல்லை என்பதை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்” என்று அவர் கூறியுள்ளார்