தனுஷ் ஐஸ்வர்யா மீண்டும் இணையவுள்ளார்கள் என பல தகவல்கள் பரவி வரும் நிலையில், அதற்கு தனுஷின் தந்தையும், இயக்குநமான கஸ்தூரி ராஜா பதிலளித்துள்ளார்.
இந்த வருடத்தின் துவக்கத்தில் விவாகரத்து செய்த தனுஷ்-ஐஸ்வர்யா ஜோடி மீண்டும் இணையவுள்ளதாக பேசப்படுகிறது. இதைப்பற்றி பல தகவல்களும் வெளியாகிவருகிறது. தற்போது, இதுகுறித்த தகவலை பற்றி தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா பேசியிருக்கிறார்.
கும்மி பாட்டு, வீர தாலாட்டி, என் ராசாவின் மனசிலே உள்ளிட்ட பிரபலமான படங்களை இயக்கியவர் கஸ்தூரி ராஜா. தனுஷின் முதல் படமான துள்ளவதோ இளமை படத்தையும் இவரே இயக்கியிருந்தார். தற்போது, பிரபல நிறுவனத்தின் யூடியூப் சேனலின் நேர்காணலில் பங்குபெற்ற கஸ்தூரி ராஜாவிடம் தனுஷ் - ஐஸ்வர்யா சம்மந்தப்பட்ட தகவல்கள் குறித்து கேட்கப்பட்டது.
தொலைக்காட்சியில் இருவரும் இணைந்து விட்டனர் என்று செய்திகள் வருகிறது, அதைப்பற்றி சொல்லுங்க சார் என நெறியாளர் கேட்க, “நான் இங்கே இருக்கேன். தொலைக்காட்சி எங்கேயோ இருக்கிறது. அல்லாஹ் போதுமானவன். எங்களுக்கு பிள்ளைகளின் சம்பாத்தியம் இல்லையென்றால் கூட எங்களால் வாழ்ந்து காட்ட முடியும். என் மனைவியை என்னால் காப்பாத்த முடியும். அவர்கள் மகிழ்ச்சியாக இருந்தால் மட்டும் போதும், அதை தவிர்த்து எந்த வித எதிர்ப்பார்ப்பும் இல்லை. அவர்களின் மகிழ்ச்சிக்கு எது இடையூறாக இருந்தாலும், அது நமக்கும் இடையூறுதான். அவர்கள் மகிழ்ச்சியாக இருந்தால் அது நமக்கு மகிழ்ச்சிதான். இதை பற்றி கேள்வி கேட்பவர்களிடம், இதே பதிலைதான் கொடுத்து வருகிறேன். எது வேண்டுமானலும் நடக்கலாம், நமக்கு என்ன தெரியும்?. ஐந்து வருடம் நமக்கு கீழ் உள்ளவர்களுக்கு, அறிவுரை சொல்ல நமக்கு தகுதியில்லை என்பது அவர்களின் கருத்தாக உள்ளது. நம்மை விட பத்து வருஷம் சின்னவர்கள், இவர் யார் இவ்வளவு வயதாகி இவருக்கு என்ன வேலை? என்று அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர். அவர்களிடம் எங்கு இருக்கிறாய். ஷூட்டிங் முடிந்ததா என்று நாம் கேள்வி எழுப்ப முடியாது. என் வயதில் நான் யார் பேச்சையும் கேட்டது கிடையாது. இதுவரை நான் யாருக்கும் கெடுதல் நினைத்தில்லை. இறைவனின் அருளால் என் நான்கு குழந்தைகளும் என்னை போல் இருக்கின்றனர். என் குழந்தைகளின் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. என் குழந்தைகள் மீது மட்டும்தான் நம்பிக்கை உள்ளது” என்று பதிலளித்தார்.
இதற்கு முன்பாக, நானே வருவேன் படம் வெளியான சமயத்தில், படம் குறித்த கேள்விகள் கஸ்தூரி ராஜாவிடம் கேட்கப்பட்டன. அப்போது, ஒருவர் “தனுஷ்-ஐஸ்வர்யாவின் விவாகரத்து” குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு அவர், “இது நமக்கு சம்மந்தமில்லாத கேள்வி நீங்க கேட்கக்கூடாது” என டென்ஷனாக பதிலளித்தார். மேலும், “இதனாலதான் மீடியாவ மீட் பன்றதில்ல..” எனவும் கேள்வி கேட்டவரை கடிந்து கொண்டார்.
தனுஷ்-ஐஷ்வர்யா விவாகரத்து:
ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவை 2004-ஆம் ஆண்டு கரம் பிடித்தார் நடிகர் தனுஷ். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், தனுஷும்-ஐஸ்வர்யாவும் பிரிந்திருக்க போவதாக அவர்களது சமூக வலைதள பக்கங்களில் தெரிவித்தனர். இந்த விஷயம் கோலிவுட் திரையுலகில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. இவர்களுக்கு யாத்ரா- லிங்கா என இரு மகன்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.