தனுஷும், ஐஸ்வர்யாவும் தாங்கள் விவாகரத்து செய்யவிருப்பதாக தங்களது சமூக வலைதள பக்கங்களில் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து இருவரும் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “18 ஆண்டுக்காலமாக நல்ல நண்பர்களாக, கணவன் மனைவியாக, பெற்றோர்களாக ஒன்றாக பயணித்து வந்துள்ளோம்.


இந்த பயணம் முழுவதிலும், வளர்ச்சி, புரிதல், ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இருந்திருக்கிறோம். ஆனால், இன்று இருவரும் பிரிய வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது. நானும் ஐஸ்வர்யாவும் பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளோம். 


எங்கள் இருவரையும் புரிந்து கொண்டு, இதில் இருந்து இருவரும் மீண்டு வருவதற்கான கால அவகாசத்தை அனைவரும் தருமாறு கேட்டுக் கொள்கிறோம். எங்களுடைய முடிவை ஏற்று எங்களது தனிமையை புரிந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்” என குறிப்பிட்டிருந்தனர்.






அதேசமயம் தனுஷ், ஐஸ்வர்யாவுக்கு இரண்டு மகன்கள் இருப்பதால் அவர்களது நிலைமையை இரண்டு பேரும் சிந்தித்து பார்த்திருக்க வேண்டும் என ஒரு தரப்பினர் கூறுகின்றனர்.


இதற்கிடையே இயக்குநரும், நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ. சந்திரசேகர் அவர்களுக்கு அறிவுரை கூறுவதுபோல் வீடியோவையும் வெளியிட்டிருந்தார்.


இந்நிலையில் இயக்குநரும், நடிகர் தனுஷின் தந்தையுமான கஸ்தூரி ராஜா, “தனுஷ், ஐஸ்வர்யா இருவருக்கும் இடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தான் உள்ளது. குடும்பங்களில் ஏற்படும் சாதாரண பிரச்சினைதான் இது. இருவரிடமும் பேசியுள்ளேன். அவர்கள் இன்னும் விவாகரத்து செய்யவில்லை. இருவரும் தற்போது சென்னையில் இல்லை ஹைதராபாத்தில் தங்கியுள்ளனர்” என்று கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண