Karuppu Movie Release Issue: சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள கருப்பு திரைப்படம் வெளியாகாமல் பலர் வழிமறிப்பதாக, கண் கலங்கி அழுதபடி இயக்குனர் ஆர்.ஜே. பாலாஜி வீடியோ வெளியிட்டுள்ளார்.
”கருப்பு வரல “ - கண்கலங்கி அழுத ஆர்.ஜே. பாலாஜி
திட்டமிட்டபடி சூர்யாவின் கருப்பு திரைப்படம் இன்று காலை வெளியாகாதது தொடர்பாக, இயக்குனர் ஆர்.ஜே. பாலாஜி கண்கள் கலங்கியபடி அழுது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “எல்லோருக்கும் வணக்கம், காரில் இருந்தபடி மற்றொரு அப்டேட். இதுவே கடைசியாக இருக்கும் என நம்புகிறேன். (கண்கள் கலங்கி அழுதபடி), அனைத்து ரசிகர்களிடமும் மனமார்ந்து மன்னிப்பு கோருகிறேன். இப்படி நடந்து இருக்கக் கூடாது. படம் பார்ப்பதற்காக நீண்ட தூரம் பயணம் செய்து காலை 9 மணிக்கெ தியேட்டருக்கு சென்ற தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா என அனைத்து ஊர் ரசிகர்களிடமும் மன்னிப்பு கோருகிறேன். படம் பார்ப்பதே வீட்டில் வாழ்க்கையில் உள்ள பிரச்னையில் இருந்து விடுபடுவதற்காக தான். ஆனால், அதற்காக இவ்வளவு தூரம் பயணித்து வந்து பார்க்க முடியாமல் போவது பெரிய மன அழுத்தத்தை ஏற்படுத்தியற்கு மன்னிப்பு கோருகிறேன்.
கருப்பு எப்போது ரிலீஸாகும்?
நானும் இதை எதிர்பார்க்கவில்லை. இன்று மாலை 6 மணிக்குள் எல்லா பிரச்னைகளும் தீர்ந்து படம் வெளியாகும் என நம்புகிறேன். நான் இதை பல நாட்கள் யோசித்து இருக்கிறேன். மே 14ம் தேதி படம் வெளியாகி பெரும் ஹிட் அடிக்கும் என்று நான் மிகவும் நம்பிக்கையாக இருக்கிறேன். அழுகு வருது கண் கலங்குது. வலி அது வேற டிபார்ட்மெண்ட். எல்லா பிரச்னைகளையும் தீர்த்து இந்த படத்தை இன்று மாலை வெளியிட கடவுள் உதவுவார் என நம்புகிறேன். அதற்காக பலரும் உழைத்து கொண்டுள்ளனர். சூர்யா சாரும் மிகவும் உழைத்துக் கொண்டுள்ளார். தாமதத்திற்காக மன்னியுங்கள். ஆனால், இந்த கஷ்டங்கள் எல்லாவற்றிற்கும் நிகரானதாக கருப்பு படம் இருக்கும். கருப்பு வரான், வழிவிடுவேன் என சொல்வேன். ஆனால் பலர் வழியை மறித்துகொண்டே உள்ளனர். எல்லாவற்றையும் தாண்டி இன்று மாலை படம் வரும். படம் நன்றாக இருக்கும் உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறேன்” என ஆர்.ஜே. பாலாஜி பேசியுள்ளார்.
திட்டமிட்டபடி வெளியாகாத திரைப்படம்:
ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். சூர்யா நாயகனாகவும், ஆர்.ஜே.பாலாஜி வில்லனாகவும், திரிஷா நாயகியாவும் நடித்துள்ள கருப்பு திரைப்படம், மாஸ் கமர்ஷியல் படமாக உருவெடுத்துள்ளது. நீண்ட இழுபறிக்குப் பிறகு இன்று வெளியாவதாக அறிவிக்கப்பட்ட கருப்பு திரைப்படத்திற்கு, முதல் இரண்டு நாட்களுக்கு சிறப்பு காட்சிகளை திரையிடவும் அரசு தரப்பு அனுமதி அளித்தது. ஆனால், நிதி சிக்கல் காரணமாக இதுவரை கருப்பு திரைப்படம் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
