மேலும் அறிய

Karuppu: திமுக ஆட்சியில இருந்து இருந்தா சூர்யா சீன வெச்சி இருப்பாரா? ஸ்டாலின் கேமியோ? கருப்பு படத்தால் உபிக்கள் ஆவேசம்

Karuppu: சூர்யா நடிப்பில் வெளியான கருப்பு திரைப்படத்தின் போஸ்ட் க்ரெடிட் சீன், திமுக மற்றும் அக்கட்சி தலைவர் ஸ்டாலினை கிண்டலடிப்பதாக நெட்டிசன்கள்கள் பேச தொடங்கியுள்ளனர்.

Karuppu: சூர்யா நடிப்பில் வெளியான கருப்பு திரைப்படத்தின் போஸ்ட் க்ரெடிட் சீன், தற்போது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.

கருப்பு திரைப்படத்தால் புதிய சர்ச்சை:

ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவான கருப்பு திரைப்படம் பல்வேறு சர்ச்சைகள் மற்றும் தடைகளுக்கு மத்தியில் கடந்த 15ம் தேதி வெளியானது. கோர்ட் ட்ராமைவை அடிப்படையாக கொண்டு மாஸ் கமர்சியல் படமாக வெளியான இந்த திரைப்படம், பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. முதல் நாளிலேயே 20 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டிய நிலையில், வார இறுதி நாட்களிலும் நல்ல வசூலை ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீண்ட நாட்களுக்குப் பிறகு திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற சூர்யாவின் படமாக கருப்பு கருதப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தின் போஸ்ட் க்ரெடிட் சீன் தற்போது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.

திமுக மீது மறைமுக அட்டாக்:

கருப்பு திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கு லீட் கொடுக்கும் வகையில், போஸ்ட் க்ரெடிட் சீன் ஒன்று இப்படத்தில் உள்ளது. அதில் முதலமைச்சர் கருப்பையா காந்தி எனும் ஆர்.ஜே. பாலாஜியின் கதாபாத்திரம் சட்டமன்றத்தில் உரையாற்றுகிறது. அப்போது, “1958 முதல் தற்போது வரை 8 முறை சட்ட கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் மாநில அரசு, மத்திய அரசு என எந்த அரசுமே நீதித்துறை கேட்டதை செய்து கொடுத்ததே இல்லை. பரிசீலனையில் மட்டுமே வைத்துள்ளனர். ஏனெறால் குட்கா விற்றது, கிட்னி திருடியது, லாக்கப்பில் இறந்தது என, சட்டமன்ற உறுப்பினர்கள் 234 பேரில் 170 பேர் மீது வழக்கு உள்ளது. இப்போது நீதித்துறை கேட்டால் நாம் சட்டமன்றத்திற்கு உள்ளே அல்ல, சிறையின் உள்ளே தான் இருப்போம். நீதித்துறை வழக்கு கோப்புகளுக்குள்ளேயே மூழ்கடித்து திணறடித்து பிரச்னைக்குள்ளே வைத்திருக்க வேண்டும். அப்போது தான் அவர்கள் நம்மை சீண்டமாட்டார்கள்” என ஆர்.ஜே.பாலாஜி பேசியுள்ளார்.

இதையும் படியுங்கள்: TVK Vijay: உள்ளாட்சியை பிடிக்கணும்..! ஆரம்பத்திலேயே வேகமெடுக்கும் ஆளுங்கட்சி - ஒரே கல்லில் இரண்டு மாங்காய்

கருப்பு படத்தில் ஸ்டாலின் கேமியோ?

தொடர்ந்து நீதித்துறையின் கோரிக்கைகளை நிறைவேற்றலாமா? வேண்டாமா? என ஒரு வாக்கெடுப்பு நடைபெறுகிறது. அதில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி என இரண்டு கட்சிகளில் இருந்து 233 பேர் நிறைவேற்ற வேண்டாம் என வாக்களிக்கின்றனர். அப்போது, தேமுதிகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை முடிந்ததை ஸ்டாலின் செய்கை மூலம் உணர்த்தியதை போன்றே ஆர்.ஜே.பாலாஜி செய்து காட்டுகிறார்.  மற்றொரு கதாபாத்திரமானது ஸ்டாலின் அணிந்திருக்க கூடியதை போன்ற மிகப்பெரிய மோதிரத்தை அணிந்து, தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை மேசையை தட்டி வரவேற்றுள்ளது. கிட்னி திருட்டு மற்றும் லாக்கப் மரணங்கள் போன்றவை கடந்த திமுக ஆட்சியின் போது மிகப்பெரிய பிரச்னைகளாக பேசப்பட்டன. அதனை உணர்த்தும் விதமாகவே வசனங்கள் அமைக்கப்பட்டுள்ளதோடு, தங்களுக்கான பிரச்னைகள் என வந்துவிட்டால் பரம எதிரியுடன் கூட அரசியல் கட்சிகள் கூட்டணி அமைக்கும் என்பதை காட்டும் விதமாகவும் கருப்பு படத்தின் போஸ்ட் க்ரெடிட் சீன் அமைந்துள்ளது.

திமுக ஆட்சியில் இருந்தால்..!

திமுக ஆட்சியில் இருந்து இருந்தால் இந்த வசனங்களும், காட்சிகளும் கருப்பு படத்தில் இடம்பெற்று இருக்குமா? அப்படியே இருந்து இருந்தால் இந்த படம் வெளியாகி இருக்குமா? என நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அதிமுக ஆட்சி காலத்தின் போது அரசின் குறைகளை சுட்டிக் காட்டிய சூர்யா, திமுக ஆட்சி காலத்தில் அமைதி காத்தார். இப்போது திமுக ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டதுமே, அவர்களை மறைமுகமாக விமர்சிக்கும் விதமான காட்சிகளை சூர்யா இடம்பெறச் செய்துள்ளார் என ஒரு தரப்பினர் சாடி வருகின்றனர்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

Pa Ranjith: ஆணவப் படுகொலை தடுப்பு தனிச்சட்டத்தை உடனே இயற்றுங்கள்.. விஜய்க்கு பா.ரஞ்சித் வேண்டுகோள்
Pa Ranjith: ஆணவப் படுகொலை தடுப்பு தனிச்சட்டத்தை உடனே இயற்றுங்கள்.. விஜய்க்கு பா.ரஞ்சித் வேண்டுகோள்
அநீதிக்கு எதிராக தண்டனை கொடுக்கும் சிங்கப்பெண்களை மையப்படுத்தி உருவாகியுள்ள ‘ஆட்டி’
அநீதிக்கு எதிராக தண்டனை கொடுக்கும் சிங்கப்பெண்களை மையப்படுத்தி உருவாகியுள்ள ‘ஆட்டி’
Watch video : சட்டசபைக்கு போகலயா? விடிவி கணேஷை கலாய்த்த விஜய் சேதுபதி..குரைக்கத் தொடங்கிய தவெக ஆதரவாளர்கள்
Watch video : சட்டசபைக்கு போகலயா? விடிவி கணேஷை கலாய்த்த விஜய் சேதுபதி..குரைக்கத் தொடங்கிய தவெக ஆதரவாளர்கள்
கஷ்டப்பட்டது நாங்க இவர் சீனுக்கே வரல...ஆர் ஜே பாலாஜியை வெளுத்து வாங்கிய திருப்பூர் சுப்ரமணியம்
கஷ்டப்பட்டது நாங்க இவர் சீனுக்கே வரல...ஆர் ஜே பாலாஜியை வெளுத்து வாங்கிய திருப்பூர் சுப்ரமணியம்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

TVK MLA Govt School | மகளுக்கு அரசுப் பள்ளியில் அட்மிஷன் ஆச்சர்யப்படுத்திய தவெக MLA வைரல் வீடியோ!
Delhi Tamilnadu House fire | விஜய் கிளம்பிய சில நிமிடங்களில்! தமிழ்நாடு இல்லத்தில் தீ விபத்து
CM Vijay Report |
Raghava Lawrence | TARGET விஜய்!TEAM அண்ணாமலை?லாரன்ஸ் மெகா ட்விஸ்ட்
Tindivanam Murder: தீர்த்துக்கட்ட சொன்ன தாய்..திட்டம் போட்டு முடித்த மகன்!குப்பை கொட்டியதால் கொடூரம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பிரதமர் மோடி கூட்டத்தில் கெத்து காட்டிய நம்ம சிஎம்... நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய் பேச்சால் அதிர்ந்த டெல்லி
பிரதமர் மோடி கூட்டத்தில் கெத்து காட்டிய நம்ம சிஎம்... நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய் பேச்சால் அதிர்ந்த டெல்லி
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் வைத்த டிமாண்ட் என்னென்ன? இதுதான் லிஸ்ட்!
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் வைத்த டிமாண்ட் என்னென்ன? இதுதான் லிஸ்ட்!
CM Vijay: நிலம் நாங்க தர்றோம்... கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுங்க - பிரதமரிடம் முதலமைச்சர் விஜய் வேண்டுகோள்
CM Vijay: நிலம் நாங்க தர்றோம்... கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுங்க - பிரதமரிடம் முதலமைச்சர் விஜய் வேண்டுகோள்
Pa Ranjith: ஆணவப் படுகொலை தடுப்பு தனிச்சட்டத்தை உடனே இயற்றுங்கள்.. விஜய்க்கு பா.ரஞ்சித் வேண்டுகோள்
Pa Ranjith: ஆணவப் படுகொலை தடுப்பு தனிச்சட்டத்தை உடனே இயற்றுங்கள்.. விஜய்க்கு பா.ரஞ்சித் வேண்டுகோள்
JEE Advanced: ஜேஇஇ அட்வான்ஸ்டு முறைகேடு புகார்: ஐஐடி ரூர்க்கி ஆய்வில் வெளியான உண்மை!
JEE Advanced: ஜேஇஇ அட்வான்ஸ்டு முறைகேடு புகார்: ஐஐடி ரூர்க்கி ஆய்வில் வெளியான உண்மை!
சொந்த ஊரிலேயே உலகத்தரம் வாய்ந்த  எஃகு கட்டமைப்பு: தஞ்சாவூரை ஐடி மையமாக மாற்றும் ‘ஹாம்லி குழுமம்’!
சொந்த ஊரிலேயே உலகத்தரம் வாய்ந்த  எஃகு கட்டமைப்பு: தஞ்சாவூரை ஐடி மையமாக மாற்றும் ‘ஹாம்லி குழுமம்’!
Upcoming Electric Cars India 2026:இந்தியாவை அதிரவைக்க வரும் டாப் EV கார்கள் லிஸ்ட்; எப்போது வருகிறது? விலை என்ன? - முழு விவரம் இதோ
இந்தியாவை அதிரவைக்க வரும் டாப் EV கார்கள் லிஸ்ட்; எப்போது வருகிறது? விலை என்ன? - முழு விவரம் இதோ
செம ஸ்மூத்... சிங்கிள் சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்! ஜாலியா ரைட் போக Joy e-bike Mihos இ ஸ்கூட்டர்!
செம ஸ்மூத்... சிங்கிள் சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்! ஜாலியா ரைட் போக Joy e-bike Mihos இ ஸ்கூட்டர்!
Embed widget