மேலும் அறிய

Karuppu Box Office: வீக் எண்டில் கல்லா கட்டிய கருப்பு..! 100 கோடியை கடந்த சூர்யாவின் சாமி படம் - மொத்தம் எவ்ளோ?

Karuppu Box Office: சூர்யா நடிப்பில் வெளியான கருப்பு திரைப்படம் முதல் வார இறுதியில் உலகம் முழுவதும் 120 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Karuppu Box Office: சூர்யா நடிப்பில் வெளியான கருப்பு திரைப்படம் முதல் வார இறுதியில், இந்தியாவில் மட்டுமே ஒட்டுமொத்தமாக 78 கோடி ரூபாய் அளவிற்கு வசூலித்துள்ளதாம்.

கல்லா கட்டிய ”கருப்பு”

சூர்யா நடிப்பில், ஆர். ஜே. பாலாஜி இயக்கத்தில் உருவான கருப்பு திரைப்படம், கடந்த 15ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. பெரும் எதிர்பார்ப்புகளுடன் வெளியான இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்க த்ரிஷா, இந்திரன்ஸ் மற்றும் நட்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கடவுள் கதாபாத்திரத்தை மையமாக கொண்ட,கோர்ட் ட்ராமா கமர்ஷியல் படமாக கருப்பு உருவாக்கப்பட்டு உள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு சூர்யா ரசிகர்களை மட்டுமின்றி, பொதுவான ரசிகர்களையும் திருப்திபடுத்தும் விதமாக கருப்பு திரைப்படம் அமைந்துள்ளதாக பலரும் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் முதல் வார இறுதியில் அந்த திரைப்படத்தின் வசூல் நிலவரம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரூ.120 கோடி வசூலை கடந்த கருப்பு

முதல் நாள் முடிவிலேயே சுமார் 20 கோடி ரூபாயை வசூலித்து இருந்த கருப்பு திரைப்படம், முதல் வார இறுதி முடிவிலேயே 120 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்துள்ளதாம். நெட் வருவாயாக 68 கோடி ரூபாயை கருப்பு திரைப்படம் மூன்று நாட்களில் வசூலித்துள்ளதாகவும், ஒட்டுமொத்தமாக 78 கோடியே 75 லட்சம் ரூபாயை வசூலித்துள்ளதாகவும் சாக்னில்க் தரவுகள் தெரிவிக்கின்றன. வெளிநாடுகளில் இருந்து மட்டும் மூன்று நாட்களில் சுமார் 42 கோடியே வசூலாகியுள்ளதாம். இதன் மூலம் முதல் மூன்று நாட்களில் கருப்பு திரைப்படத்தின் ஒட்டுமொத்த வசூல் 120 கோடியே 75 லட்சம் ரூபாயாக உள்ளது. பல்வேறு தரப்பிலும் நேர்மறையான கருத்துகள் வருவதால், கருப்பு திரைப்படம் அடுத்தடுத்த நாட்களில் மேலும் வசூலை வாரிக்குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெரிய படங்கள் எதுவும் இந்த வாரம் வெளியாக பட்டியலிடப்படவில்லை என்பது கருப்பு திரைப்படத்திற்கு சாதகமாக உள்ளது.

முதல் மூன்று நாட்கள் வசூல் நிலவரம்:

கருப்பு திரைப்படம் முதல் நாளே இந்தியாவில் மட்டும் 15.50 கோடி ரூபாயை வசூலித்துள்ளது. இரண்டாவது நாளான சனிக்கிழமை மிகப்பெரிய ஏற்றம் கண்டு படத்தின் பாக்ஸ் ஆஃபிஸ் வசூல் 24 கோடியே 15 லட்சமாக அதிகரித்துள்ளது. தொடர்ந்து, மூன்றாவது நாளும் ஞாயிற்றுக்கிழமையான நேற்று 28 கோடியே 35 லட்சம் ரூபாய் வசூலாகியுள்ளது. இதில் தமிழ்நாட்டில் இருந்து மட்டுமே 48 கோடியே 50 லட்சம் பதிவாகியுள்ளது. ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் 12 கோடியே 50 லட்சமும், கர்நாடகாவில் 9 கோடியே 85 லட்சம் ரூபாயும், கேரளாவில் 6 கோடியே 45 லட்சம் ரூபாயும் வசூலாகியுள்ளது.

இதையும் படியுங்கள்: Thiruma: ”TVK-க்கு லெட்டர் கொடுத்தாலும், விஷயத்தை வெளியே சொல்லாதிங்க, CM போஸ்ட் ரெடி” - நோ சொன்ன திருமா

சூர்யாவின் சாமி பட கதை..

'கருப்பு' திரைப்படத்தில், கருப்புசாமி தெய்வத்தின் மனித அவதாரமாக மாறும் வழக்கறிஞரான சரவணன் கதாபாத்திரத்டில் சூர்யா நடிக்கிறார். ஊழல் நிறைந்த சட்ட அமைப்பில் சிக்கி, ஏமாற்றப்பட்ட ஒரு ஆதரவற்ற தந்தை மற்றும் மகளுக்கு நீதி வாங்கி தருவதை அடிப்படையாக கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. சிங்கம் 2 திரைப்படத்திற்கு பிறகு திரையரங்குகளில் படத்தை வெளியிட்டு மிகப்பெரிய வெற்றியை ஈட்ட முடியாமல் சூர்யா தடுமாறி வந்தார். அந்த காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கருப்பு திரைப்படம் அமைந்துள்ளது. தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரங்களான விஜய் மற்றும் அஜித் திரையுலகில் இருந்து விலகியுள்ள நிலையில், குடும்பமாக படம் பார்க்க செல்பவர்களுக்கு சூர்யா படம் நல்ல தேர்வாக அமைந்துள்ளது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

என்மீது புதிய வழக்கு...ஆர்.எஸ்.எஸ் காரன் கூட இவ்வளவு கீழ்தரமா நடந்துக்கமாட்டான்..ஜூலி வீடியோ
என்மீது புதிய வழக்கு...ஆர்.எஸ்.எஸ் காரன் கூட இவ்வளவு கீழ்தரமா நடந்துக்கமாட்டான்..ஜூலி வீடியோ
ரஜினிக்கு விஜய் மீது பொறாமையா? அவர் ஏற்கனவே ஒரு தலைவர்..லதா ரஜினிகாந்த் அதிரடி பேச்சு
ரஜினிக்கு விஜய் மீது பொறாமையா? அவர் ஏற்கனவே ஒரு தலைவர்..லதா ரஜினிகாந்த் அதிரடி பேச்சு
பரிசு கொடுத்த காரில் ரைட் கூப்பிட்டு போன சூர்யா..ஆர் ஜே பாலாஜி ஒரே குஷி
பரிசு கொடுத்த காரில் ரைட் கூப்பிட்டு போன சூர்யா..ஆர் ஜே பாலாஜி ஒரே குஷி
வேளச்சேரி டூ தாம்பரம் சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்!
வேளச்சேரி டூ தாம்பரம் சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Srivaikuntam TVK issue :
Kerala Baby: நடுரோட்டில் கைக்குழந்தை!அதிவேகத்தில் வந்த பேருந்து..நடத்துநர் மாஸ் சம்பவம்
TVK MLA Govt School | மகளுக்கு அரசுப் பள்ளியில் அட்மிஷன் ஆச்சர்யப்படுத்திய தவெக MLA வைரல் வீடியோ!
Delhi Tamilnadu House fire | விஜய் கிளம்பிய சில நிமிடங்களில்! தமிழ்நாடு இல்லத்தில் தீ விபத்து
CM Vijay Report |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
’’கர்நாடகா சென்ற விஜய் காவிரி நீரை கொண்டு வருவாரா? பொய்க்கால் குதிரை அரசு’’ அடித்து ஆடும் திமுக, அதிமுக!
’’கர்நாடகா சென்ற விஜய் காவிரி நீரை கொண்டு வருவாரா? பொய்க்கால் குதிரை அரசு’’ அடித்து ஆடும் திமுக, அதிமுக!
DMK:
"ஸ்டாலின் மட்டுமில்லை, திமுக தோற்கவும் சேகர் பாபு காரணம்" அறிக்கையால் அதிர்ந்த அறிவாலயம்
Judgement : ’வெறும் 730 ரூபாய்க்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு’ நடந்தது என்ன?
’திமுக நிர்வாகிக்கு 25 ஆண்டுகள் கழித்து சிறை’ பின்னணி என்ன..?
Arun IPS : ‘திமுக மாஜிக்களுக்கு குறி’ அருணை வைத்தே ஆப்பு வைக்கும் முதல்வர் விஜய்..!
‘திமுக மாஜிக்களுக்கு குறி’ ஊழல் பட்டியலை எடுக்கும் DVAC..!
Kollur Mookambika Temple : ’முதல்வர் விஜய் செல்லும் கொல்லூர் மூகாம்பிக்கை கோயில்’ அப்படி என்ன விஷேஷம்..!
’முதல்வர் விஜய் செல்லும் கொல்லூர் மூகாம்பிக்கை கோயில்’ அப்படி என்ன விஷேஷம்..!
Hyundai Hatchback: SUV இம்பேக்டில் ஹுண்டாயின் ப்ரீமியம் ஹேட்ச்பேக் - புது டிசைன், கேபின் அப்டேட்கள் - விலை எப்படி?
SUV இம்பேக்டில் ஹுண்டாயின் ப்ரீமியம் ஹேட்ச்பேக் - புது டிசைன், கேபின் அப்டேட்கள் - விலை எப்படி?
பிளஸ் 2 பொதுத்தேர்வு மறுகூட்டல், மதிப்பீடு; விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!
பிளஸ் 2 பொதுத்தேர்வு மறுகூட்டல், மதிப்பீடு; விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!
DVAC: திமுகவின் பரிசை ரத்து செய்த தவெக அரசு..! கலக்கத்தில் வைத்திலிங்கம், லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி
திமுகவின் பரிசை ரத்து செய்த தவெக அரசு..! கலக்கத்தில் வைத்திலிங்கம், லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி
Embed widget