சூர்யா நடித்துள்ள ’ரெட்ரோ’ படத்தின் 'Kanimaa' என்ற பாடல் வெளியாகியுள்ளது.
ரெட்ரோ திரைப்படம்
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் ‘ரெட்ரோ’. இது சூர்யாவிற்கு 44 ஆவது படம். ஸ்டோன் பெஞ்ச மற்றும் 2D எண்டர்டெயின்மெண்ட் ஆகிய இரண்டு நிறுவனங்கள் தயாரித்துள்ளது. இப்படத்தில் பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், கருணாகரன் உள்ளிட்டவர்கள் பிற கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். சந்தோஷ் நாரயணன் படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் முதல் பாடல் கண்ணாடி பூவே பாடல் வெளியாகி ஏற்கனவே ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. ’கண்ணாடி பூவே’ பாடலை விவேக் எழுதியுள்ளார். சந்தோஷ் நாராயணனே இந்தப் பாடலை பாடியுள்ளார்.
சந்தோஷ் நாயராணன் ’கனிம்மா’ பாடலுக்கு ஆடும் வீடுயோவும் இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது.
கனிம்மா பாடல் வெளியீடு:
ரெட்ரொ படத்தின் இரண்டாவது பாடல் ‘கனிம்மா’ வெளியாகி உள்ளது. இதற்கு ப்ரோமோ வெளியிடப்பட்டது. விசுவல், மியூசிக் என நல்ல குத்துப் பாடலாக இருக்கும் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்தனர். இந்தப் பாடலை சந்தோஷ் நாராயணன் பாடியுள்ளார். சூர்யா, பூஜா ஹெக்டே இருவரின் திருமணம் சமயத்தின் இடம்பெறும் நல்ல குத்து பாடல் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்,.
ரெட்ரோ ரிலீஸ்:
கார்த்திக் சுப்புராஜ் - சூர்யா கூட்டணியில் உருருவாகியிருக்கும் இந்தப் படம் காதல், ஆக்சன் கலந்த படலாம இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தின் ட்ரெய்லருக்காக ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். சூர்யாவின் கங்குவா திரைப்படம் அவரின் ரசிகர்களுக்கு பிடித்திருந்தாலும் வசூல் ரீதியிலாக நல்ல வரவேற்பை பெறவில்லை என்று சொல்லப்படுகிறது. வரும் மே 1 ஆம் தேதி ரெட்ரோ திரைப்படம் திரையரங்கில் வெளியாக இருக்கிறது.