தமிழ்நாட்டின் மிகப்பெரிய கல்வி நிறுவனமும், இந்தியாவின் மிகச்சிறந்த பொறியியல் பல்கலைக்கழகமாகவும் திகழ்வது அண்ணா பல்கலைக்கழகம் ஆகும். தமிழ்நாட்டின் அடையாளமாக திகழும் இந்த அண்ணா பல்கலைக்கழகத்தின் உள்ளே, பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறி, ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு தமிழ்நாடு முழுவதும் கண்டனக் குரல்கள் எழுந்து வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் இன்று நிருபர்களைச் சந்தித்தார்.
கைது செய்யப்பட்ட ஞானசேகரனுக்கு தற்போது 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். ஞானசேகரனுக்கு 4 மனைவிகள் உள்ளனர். அதில் ஒரு மனைவியே அண்ணா பல்கலைக்கழக ஊழியர் ஆவார். இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிக்கு தக்க தண்டனை வழங்க வேண்டும் என்றும், ஜாமின் வழங்கவே கூடாது என்றும் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
கார்த்திக் சுப்பராஜ் எதிர்ப்பு
இந்த நிகழ்வு தொடர்பாக திரைத்துறையினர் பெரும்பாலும் மெளம் காத்து வருகிறார்கள். ஒரு சிலரைத் தவிர. திரைப்பட இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் அண்ணா பல்கலைகழகத்தில் நிகழ்ந்த பாலியல் வன்கொடுமைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். " இந்த நிகழ்வில் சம்பந்தபட்ட அனைத்து ஆண்களும் நரகத்திற்கு செல்ல வேண்டும்" என அவர் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.