ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியலான கார்த்திகை தீபத்தில் இன்றைய எபிசோடில் நடக்கப்போவது என்ன எனப் பார்க்கலாம்!
இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் தீபா வீட்டுக்கு கார்த்திக் வந்த நிலையில், கார்த்திக் கீழே உட்கார்ந்து சாப்பிட மாட்டார் என்ற காரணத்தினால் டைனிங் டேபிள் வாங்க முடிவெடுக்க, கார்த்திக் “அதெல்லாம் வேண்டாம்” எனத் தடுக்கிறான்.
இதனைத் தொடர்ந்து இன்றைய எபிசோடில் கார்த்திக் “15,000 செலவு பண்ணி டைனிங் டேபிள் எல்லாம் வாங்க வேண்டாம், ஒரு வேட்டி இருந்தால் போதும், கீழே உட்கார்ந்து கொள்கிறேன்” என்று சொல்லி வேட்டி கட்டிக் கொண்டு தரையில் அமர்கிறான்.
அதன் பிறகு கார்த்திக், தீபா இருவரையும் உட்கார வைத்து செய்ய வேண்டிய முறை என சில சடங்குகளை செய்ய, இதையெல்லாம் மைதிலி ஐஸ்வர்யாவுக்கு வீடியோ காலில் காட்டி வெறுப்பேற்றுகிறாள். அது மட்டுமில்லாமல் “இன்றைக்கு நைட் முதலிரவு நடக்க போகுது” என்று சொல்லி போனை கட் செய்ய ஐஸ்வர்யா அதிர்ச்சி அடைகிறாள்.
அடுத்ததாக மைதிலி முதலிரவுக்காக ரூமை ஏற்பாடு செய்ய, இதை பார்த்த தீபா அதிர்ச்சியாகி, “எதுக்கு அண்ணி இதெல்லாம் பண்ணிட்டு இருக்கீங்க? இப்போ இருக்கிற பிரச்சனையில் இது தேவையா?” என்று கேட்க, “இதெல்லாம் நடந்தா தான் உன்னை அவங்க வீட்ல ஏத்துப்பாங்க, நான் ஏற்பாடுகள் செய்தே ஆகுவேன்” என ஷாக் கொடுக்கிறாள் மைதிலி.
இதனால் தீபா தன்னுடைய அப்பா அம்மாவிடம் இது பற்றி சொல்ல, அவங்க “ஏன் இந்த ஏற்பாடெல்லாம் பண்ணிட்டு இருக்க? இதையெல்லாம் கார்த்திக் எப்படி எடுத்துப் பாருனு தெரியல” என்று கோபப்பட, மைதிலி “நான் இந்த வீட்டு மருமகள் தானே, செய்ய வேண்டிய சடங்கு எல்லாம் செய்யணும்ல” என்று சொல்ல, “உனக்கு யார் இதையெல்லாம் செய்ய சொல்லி அனுமதி கொடுத்தது” என தர்மலிங்கம் கேள்வி எழுப்புகிறாள்.
இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பதை நாளைய எபிசோடில் பார்க்கலாம்.