2டி நிறுவனம் விருமன் படத்தின் பிரோமோஷனை சயின்ஸ் ஃபிக்சன் படத்திற்கு செய்வது போல செய்துள்ளது என்று பேசியிருக்கிறார். 

Continues below advertisement


விருமன் படம் வரும் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், இன்று சென்னையில் அந்தப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது. 


இதில் கலந்து கொண்ட நடிகர் கார்த்தி பேசும் போது, “ அண்ணனோட 2டி நிறுவனம் படத்தோட பிரோமோஷனுக்கு பெரிய அளவுல செலவு பண்றாங்க. கிராமங்கள்ல கலாச்சாரம் மாறவே இல்ல. ஊரு பக்கம் போகும் போது வேட்டி கட்டி படம் பண்ணுங்க சொல்லுவாங்க. கொம்பன், கடைக்குட்டி சிங்கம் படத்துல பருத்திவீரன் சாயல் வரக்கூடாது அப்படின்னு ரொம்ப மெனக்கிட்டேன். இந்தப்படத்துல பருத்திவீரன் சாயல் வந்துருச்சு. லோக்கலா இறங்கி நடிச்சிருக்கோம். 


படத்துல பந்தல் போடுற பையன் கேரக்டர் கொடுத்துருக்காங்க. கஞ்சாப்பூ பாட்ட கேட்டதுதான் ஓ கஞ்சால பூ லாம் பூக்குமான்னு தெரிஞ்சிச்சு. உண்மையில வாழ்கை கிராமத்துலதான் இருக்கு. அண்ணன் அடிக்கடி நம்மள சுத்தி இருக்குறவங்க நல்லா இருந்தாத்தான் நம்ம நல்ல இருக்க முடியும், அவங்க நல்லா சம்பாதிக்கணும்னு சொல்லிட்டே இருப்பாரு. 2டி நிறுவனம் பெரிய அளவுல பிரோமோஷன் கொடுத்து இருக்காங்க”  என்று பேசினார்.