உலக நாயகன் கமல்ஹாசனின் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் 1997-ஆம் ஆண்டு துவங்கப்பட்ட திரைப்படம் மருதநாயகம். இந்த திரைப்படத்தை கமல்ஹாசன் தனது லட்சிய திரைப்படம் என பல மேடைகளில் கூறியிருக்கிறார். இந்த திரைப்படம் பல்வேறு காரணங்களால் கிடப்பில் போடப்பட்டுள்ளது. பிரம்மாண்ட பொருட்செலவில் கமலே இந்த படத்தை தயாரித்து வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே வெளியான படத்தின் போஸ்டர்கள் இப்போதும் கமல்ஹாசனின் பிறந்தாளை அலங்கரித்துக்கொண்டுருக்கின்றன. இந்த நிலையில் மருதநாயகம் ஷூட்டிங் சமயத்தில் நடந்த சுவாரஸ்யமான நிகழ்வு ஒன்றை நடிகர் கார்த்தி மேடையில் பகிர்ந்திருக்கிறார்.







“எனக்கு அடிக்கடி நான் சொல்லிக்குற கதை இது.மருதநாயகம் படம் எடுத்துக்கொண்டிருந்த சமயம் அது. அப்போ மருதநாயகத்தோட முகத்தை நகல் எடுக்க வேண்டியிருந்தது. அதற்காக முகத்தில் சிமெண்டை ஊற்றி காத்திருக்க வேண்டும். அந்த சமயத்தில் கண்ணை திறந்திடாதீர்கள். அசையாதீர்கள் , மூச்சு விடாதீர்கள் அப்படினு பல கண்டிஷன்களை போடுவார்கள்.அப்படி கமல் சாருக்கு எடுத்துருக்காங்க. அடுத்த நாள் அதை உதவி கலை இயக்குநர் அதை வாங்குவதற்காக சென்றிருக்கிறார். அதை பார்த்தவர் அப்படியே நடுங்கி அழ ஆரமித்துவிட்டார். அது மருதநாயகம் கிளைமேக்ஸில் இருக்க வேண்டிய தலை.துண்டிக்கப்பட்ட தலை . ஒரு பக்கம் கண்களை குறுக்கி , வாயெல்லாம் திரும்பி அது போல இருந்திருக்கிறது. உங்களை நாங்க என்னவென்று சொல்வது சார். அமைதியாக இருக்க வேண்டிய இடத்திலும் நடித்து அதற்கு உயிர் கொடுத்திருக்கிறீர்களே ! “ என பெருமிதமாக பேசியிருக்கிறார் கார்த்தி.


கமல்ஹாசன் தற்போது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.