மணிரத்தினம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து முடித்த கார்த்தி , அடுத்ததாக முத்தையா இயக்கத்தில் உருவாகும் விருமன் படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். முத்தையா - கார்த்தி கூட்டணியில் முன்னதாக கொம்பன் படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.  இவர்கள் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தில் ஷங்கரின் இரண்டாவது மகள் அதிதி ஷங்கர் கதாநாயகியாக அறிமுகமாகிறார் அதிதி மருத்துவவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. படத்தை கார்த்தியின் அண்ணனும் நடிகருமான சூர்யா தயாரிக்கிறார். படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிரார். இது குறித்த தகவல்கள் எல்லாம் முன்னதாக நாம் அறிந்ததுதான் என்றாலும் , தற்போது விருமன் படத்தின் படப்பிடிப்பு முடிந்ததாக கார்த்தி , அதிதி உள்ளிட்ட படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். கிராமத்து பின்னணியில் உருவாகும் விருமன் படம் மதுரை , தேனி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. இது குறித்து தெரிவித்துள்ள கார்த்தி “ சிறப்பாக திட்டமிட்டு செயல்படுத்தியிருக்கிறார் இயக்குநர் முத்தையா. அதிதி உங்களின் கெரியருக்கு வாழ்த்துக்கள் ..இந்த பயணத்தை என்ஜாய் பண்ணுங்க..நீங்க இயல்பானவர்! வாழ்த்துக்கள்..யுவனுடன் மீண்டும் இணைந்தது மகிழ்ச்சி... நன்றி தயாரிப்பாளர் சூர்யா. “ என குறிப்பிட்டுள்ளார் .

Continues below advertisement


 






அதே போல நடிகை அதிதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கார்த்தியுடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து “ விருமன் மற்றும் தேன்மொழி... கார்த்தி சார் ரொம்ப நன்றி! எனக்கு சிறந்த co-star ஆகவும், சப்போர் சிஸ்டமாகவும் , மெண்டராகவும் இருந்தீங்க..எனக்கு உங்க கூட நடிச்சதுல ரொம்ப பெருமை..இது ஒரு ஆசீர்வதிக்கப்பட்ட பயணம் “ என குறிப்பிட்டுள்ளார்.மேலும் விருமன் படம் மூலமாக தனது கனவு நினைவானதாக்வும் தெரிவித்துள்ளார்.


 






 


தற்போது போஷ்ட்புரடக்‌ஷன் வேலைகளில் கவனம் செலுத்தும் படக்குழு, விரைவில் விருமன் படம் குறித்த அடுத்தடுத்த அறிவிப்பை வெளியிடுவார்கள் .