இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் வெளியாகியுள்ள வா வாத்தியார் படத்தின் முதல் காட்சி நிறைவடைந்துள்ள நிலையில் ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அதனைப் பற்றிக் காணலாம்.
ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிப்பில் கார்த்தி, கிரித்தி ஷெட்டி, சத்யராஜ், ராஜ்கிரண், வடிவுக்கரசி, ஷில்பா மஞ்சுநாத், ஆனந்தராஜ் உள்ளிட்ட பலரின் நடிப்பில் உருவாகியுள்ள படம் “வா வாத்தியார்”. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படத்தை நலன் குமாரசாமி இயக்கியுள்ளார். பல வருட இடைவெளிக்குப் பின் நலன் படம் இயக்கியுள்ளது அவரது ரசிகர்களை மகிழ்ச்சிக்குள்ளாகியுள்ளது. அதேசமயம் வா வாத்தியார் படம் 2025 டிசம்பரில் வெளியாகும் என இரண்டு முறை ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்ட நிலையில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக 2026 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று வெளியாகியுள்ளது. இப்படம் பற்றி சமூக வலைத்தளத்தில் படம் பார்த்தவர்கள் விமர்சனங்களைப் பதிவிட்டு வருகின்றனர்.
வா வாத்தியார் பட விமர்சனம்
இந்த படம் அடிப்படையில் ஒரு கற்பனை கலந்த சூப்பர் ஹீரோ படம். எம்.ஜி.ஆர் தான் அந்த சூப்பர் ஹீரோ. கார்த்தி கதாபாத்திரத்தில் அவரின் மேனரிசங்கள் சிறப்பாக வந்துள்ளது. சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை மிகப்பெரிய அளவில் கைக்கொடுத்துள்ளது. நலனின் தனித்துவமான எம்ஜிஆரை கொண்டாட ஒரு சிறந்த படமாக அமைந்துள்ளது. ஆக்ஷன் காட்சிகள், இடைவேளை மற்றும் கிளைமேக்ஸ் அருமையாக அமைக்கப்பட்டுள்ளது.
வா வாத்தியார் படம் கார்த்தியின் நடிப்பு பிரமிக்க வைக்கிறது. ஒற்றை ஆளாக படத்தை தாங்கி பிடித்துள்ளார். வாத்தியார் பரிணாமங்கள் உண்மையில் வியக்க வைக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வா வாத்தியார் படம் குடும்பத்துடன் இந்த பொங்கலை கொண்டாட ஒரு சிறந்த படமாகும். கார்த்தியின் சினிமா கேரியரில் மற்றுமொரு சிறந்த பரிசோதனை முயற்சி என சொல்லலாம்.
எம்.ஜி.ஆர் ரசிகர்கள்னா யாருன்னு இந்த பொங்கல் பார்க்க போகுது !. எம்.ஜி.ஆர் தான் இதை நடத்தி வைக்கிறார் - துளி அளவும் சந்தேகம் வேண்டாம் ! அவர் இன்றும் வாழ்கிறார் !