ஜப்பான்


கார்த்தி நடித்து ராஜூ முருகன் இயக்கத்தில் கடந்த நவம்பர் 10 தேதி வெளியானது ஜப்பான் திரைப்படம். அனு இமானுவேல், விஜய் மில்டன், கே எஸ் ரவிக்குமார், சுனில் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்திருந்தனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். ட்ரீம் வாரியர்ஸ் பிக்ச்சர்ஸ் இப்படத்தை தயாரித்தது.


திரையரங்கில் சொதப்பிய ஜப்பான்


கார்த்தியின் 25 ஆவது படமாக உருவான ஜப்பான் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு பெரும் எதிர்பார்ப்புகளுடன் களமிறங்கியது. ஜப்பான் திரைப்படத்துடன் போட்டியாக கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய ஜிகர்தண்டா திரைப்படம் வெளியானது. இரண்டு படங்களுக்கும் அட்டகாசமான ஓப்பனிங் கிடைத்த நிலையில் அதனை தக்கவைத்துக் கொள்ள தவறியது ஜப்பான் திரைப்படம்.


சுவாரஸ்யமான கதையாக இருந்தபோதிலும் அதனை கச்சிதமான ஒரு திரைக்கதையில் சொல்லத் தவறியது இப்படத்திற்கு பெரும் நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றுத் தந்தது. விமர்சன ரீதியாக மட்டுமில்லாமல் வசூல் ரீதியாகவும் ஜப்பான் திரைப்படம் சறுக்கியது. மறுபக்கம் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் அடித்து நொறுக்கியது. தற்போது வெளியாகி 15 நாட்களுக்கு மேலாகியுள்ள நிலையில் ஜப்பான் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி வெளியாகி உள்ளது.


ஓடிடியில் எப்போ ?







ஜப்பான் படத்தின் ஓடிடி உரிமத்தை நெட்ஃப்ளிக்ஸ் பெற்றுள்ளது. வரும் டிசம்பர் 11ஆம் தேதி இந்தப் படம் ஓடிடியில் வெளியாகும் என்று நெட்ஃப்ளிக்ஸ் தங்களது எக்ஸ் தளத்தில் அறிவுறுத்தியுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் இப்படம் வெளியாக இருக்கிறது.

அதே நேரத்தில் திரையரங்கத்தில் சக்கைப் போடு போட்ட ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் வரும் டிசம்பர் 8 ஆம் தேதி அதே நெட்ஃப்ளிக்ஸில் வெளியாக இருக்கிறது.


ஜிகர்தண்டா பார்க்காதவர்களுக்கு





கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா, நவீன் சந்திரா, நிமிஷா சஜயன், சத்யன், சஞ்சனா நடராஜன் , இளவரசு ஆகியார் நடித்து சந்தோஷ் நாராயணன் இசையமைத்த படம். ஸ்டோன் பெஞ்சு நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.