கன்னட மொழி குறித்து கமலஹாசன் பேசிய விவகாரத்தில் கர்நாடகாவில் தங்களைப் படம் வெளியாக விதிக்கப்பட்ட தரையை நீக்க கோரி தாக்கல் செய்த மனுவை விசாரித்த கர்நாடகா நீதிமன்றம் மொழி குறித்து பேச நீங்கள் யார் என கமலுக்கு சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளது
தக் லைஃப் சர்ச்சை:
இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் கமல்ஹாசன்,சிம்பு, திரிஷா நடித்த தக் லைஃப் திரைப்படம் வருகிற ஜூன் 5ஆம் தேதி வெளியாக உள்ளது இந்த நிலையில் சமீபத்தில் நடந்த தக் லைஃப் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட கமலஹாசன் கன்னடம் தமிழிலிருந்து தான் உருவானது என்று கூறியிருந்த நிலையில் கமலின் இந்த கருத்துக்கு கர்நாடக முதல்வர் முதல் பல்வேறு கன்னட அமைப்புகள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினார். கமல்ஹாசன் தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் இதன் காரணமாக கர்நாடகாவில் போராட்டங்கள் நடைபெற்று வந்த நிலையில் மன்னிப்பு கோர முடியாது என கமலஹாசன் திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.
வழக்கு
இந்த நிலையில் தக் லைஃப் படத்தை கர்நாடகாவில் கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தடை விதித்திருந்தது. இதற்காக கமலஹாசன் தனது பட நிறுவனமான ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடுத்திருந்தார் அந்த மனுவில் தனது படத்தை வெளியிட அரசு மற்றும் காவல்துறை மற்றும் திரைப்பட வர்த்தக சபை தடை விதிக்கக்கூடாது எனவும் திரையரங்குகளில் எந்தவித தடை இன்றி படம் வெளியாவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் தனது படம் வெளியாகும் நாள் என்று திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என கமலஹாசன் கோரிக்கை விடுத்திருந்தார்.
வழக்கு விசாரணை:
இந்நிலையில் இன்று இந்த வழக்கை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்றம் கமல்ஹாசனுக்கு அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளது. ”மொழி குறித்து பேச நீங்கள் என்ன மொழியில் ஆய்வாளரா அல்லது வரலாற்று ஆய்வாளரா என்று கேள்வி எழுப்பியிருந்தது. தமிழிலிருந்து கன்னடம் எப்படி பிறந்தது என நீங்கள் கூற முடியும் இதற்கான ஆதாரம் உங்களிடம் உள்ளதா என்றும் கேள்வி எழுப்பியுள்ளது கோடிக்கணக்கான மக்களின் மனம் புண்படும் வகையில் நீங்கள் பேசிய உள்ளீர்கள் ஒரு மன்னிப்பு கேட்டால் இந்த பிரச்சனை முடிவு வந்துவிடும். நீர் நிலம் மொழி மூன்றுமே குடிமக்களுக்கு மிக முக்கியமானதாகும். இப்படி மொழியை சிறுமைப்படுத்தி விட்டு வணிக நோக்கில் கமல் நீதிமன்றம் வந்துள்ளார் என நீதிபதி காட்டமாக கூறிவிட்டு வழக்கை பிற்பகல் 2:30 மணிக்கு ஒத்தி வைத்து விட்டார்.