Surya Upcoming Film | நடிகர் சூர்யாவுடன் இணையும் கர்ணன் பட நாயகி..

கர்ணன் படத்தில் அனைவர் கவனத்தையும் ஈர்த்த  ரஜீஷா விஜயன் தற்பொழுது பிரபல நடிகருடன் தனது அடுத்த படத்தை துவங்க இருக்கிறார் .

Continues below advertisement

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் சில தினங்களுக்கு முன்பு வெளியான கர்ணன் படம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. படத்தில் தனுஷ் தவிர்த்து  படத்தின் நாயகி மற்றும் தனுஷின் தந்தையாக நடித்த லால் இருவரின் கதாபாத்திரங்களும் அனைவராலும் பாராட்டப்பட்டது . ரஜீஷா விஜயன் மலையாளத்தில் கடந்த 2016ல் வெளியான ‘அனுராக கரிக்கின் வெள்ளம்’ என்கிற படத்தின் மூலம் சினிமா துறையில் அறிமுகம் ஆனார் , தனது முதல் படத்திலேயே சிறந்த நடிகைக்கான மாநில அரசு விருதை வென்றார்.

Continues below advertisement


இந்நிலையில் நடிகை ரஜீஷா விஜயன் கார்த்தி நடிப்பில் வெளியாகவுள்ள ‛சர்தார் ’ திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் என்ற செய்தி சில தினங்களுக்கு முன்பு தான் வெளியானது. இதனை தொடர்ந்து நடிகர் சூர்யாவுடன் அடுத்து நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் .கூட்டத்தில் ஒருவன் படத்தை இயக்கிய டி.ஜே.ஞானவேல், அடுத்ததாக இயக்கும் புதிய படத்தில், நடிகர் சூர்யா கவுரவ வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் ரஜீஷா விஜயன் நடிக்கிறார் . சூர்யாவிற்கு ஜோடியா என்பது இன்னும் தகவல்  தெரியவில்லை, பழங்குடியினர் வாழ்க்கையை மய்யமாக வைத்து இந்த படம் இருக்கும் ,மக்களை காப்பாற்றும் வக்கீல் வேடத்தில் சூர்யா நடிக்கிறார் என்ற செய்தி மட்டும் வெளியாகியுள்ளது . 

Continues below advertisement
Sponsored Links by Taboola