கன்னட படமான காந்தாரா பெரிய ஹிட்டாகி, தமிழ் தெலுங்கு  என பல மொழிகளில் வெளியாகியது. இந்நிலையில், ஹிந்தியில் வெளியான காந்தாரா வசூல் ரீதியாக, பொன்னியின் செல்வனை வீழ்த்தியுள்ளது.


கன்னடத்தில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றுள்ள ரிஷப் ஷெட்டியின் காந்தாரா படம் அம்மாநில அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனத்தின் பிரமாண்ட படைப்புகளான கே.ஜி.எஃப்., கே.ஜி.எஃப்  2 படங்களை தொடர்ந்து சமீபத்தில் வெளியான படம் "காந்தாரா". ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள இப்படத்தில் கிஷோர், சப்தமி கவுடா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி காந்தாரா படம் வெளியாகி திரையுலகில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.






பிற மொழியைச் சேர்ந்தவர்களும் அப்படத்தைப் பார்க்க அதீத ஆர்வம் கொண்டிந்தனர். அதற்கேற்றாற்போல் காந்தாரா படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டு கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி வெளியாகி நல்ல வசூலை குவித்து வருகிறது.


பழங்குடி மக்களுக்கும் பண்ணையாருக்குமான நிலப் பிரச்சனையை  மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இப்படம் அரசு நிர்வாகம் நிலச்சுவான்தார்கள், பழங்குடி மக்கள் ஆகிய 3 பேரும் இடையேயான நில அரசியலை துல்லியமாக காட்டுவதாக பலரும் கருத்து தெரிவித்திருந்தனர்.   






இப்படத்தை நடிகர்கள் கார்த்தி, தனுஷ், ப்ரித்விராஜ் உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்களும் பாராட்டினர். மேலும் உலக அளவில் வரவேற்பை பெற்றுள்ள இப்படம்  250 கோடி ரூபாய் வசூலை எட்டியுள்ளது. பொன்னியின் செல்வன் பல மொழிகளில் வெளியான அதே நாளில், காந்தாரா கன்னட மொழியில் மட்டும் வெளியானது. ஹிந்தி மொழியில் பொன்னியின் செல்வன் பெரிதாக ஹிட் அடிக்கவில்லை. அதன் எதிரொலியாக ஹிந்தியில் மணிரத்தினத்தின் படம் குறைந்த வசூலை குவித்தது. ஆனால், அதற்கு பிறகு ஹிந்தியில் வெளியான காந்தாரா, பொன்னியின் செல்வன் வசூலை வீழ்த்தி சாதனை படைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.