கன்னட திரையுலகில் மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் காந்தாரா. கடந்த 2022ம் ஆண்டு சிறிய பட்ஜெட்டில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்த படத்தின் முந்தைய பாகமாக காந்தாரா லெஜண்ட் படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கினார். 

Continues below advertisement

100 கோடியை அள்ளிய காந்தாரா 2:

தசரா பண்டிகையை முன்னிட்டு கடந்த 2ம் தேதி இந்த படம் வெளியாகியது. காந்தாரா படம் இந்தியா முழுவதும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதால் இந்த படம் கன்னடம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, மலையாளம், வங்காளம், இந்தி மற்றும் ஆங்கிலத்தில் வெளியாகியது.

படத்திற்கு தொடர்ந்து நேர்மறையான விமர்சனங்கள் வருவதால் படம் வசூலை குவித்து வருகிறது. இந்தியாவில் மட்டும் முதல் நாளில் ரூபாய் 61.85 கோடியை படம் வசூலித்தது. முதல் நாளில் கன்னடத்தில் ரூபாய் 19.6 கோடியும், தெலுங்கில் ரூபாய் 13 கோடியும், இந்தியில் ரூபாய் 18.5 கோடியும்,தமிழில் ரூபாய் 5.5 கோடியும், மலையாளத்தில் ரூபாய் 5.25 கோடியும் வசூல் செய்தது.

Continues below advertisement

இரண்டாவது நாளான நேற்று ரூபாய் 43.65 கோடி ரூபாய் வசூலை படம் குவித்துள்ளது. மொத்தமாக படம் வெளியான 2 நாட்களிலே ரூபாய் 100 கோடி வசூலை இந்தியாவில் கடந்துள்ளது. அதாவது, ரூபாய் 105.5 கோடி ரூபாய் வசூலை காந்தாரா குவித்துள்ளது. இந்தியாவில் மட்டும் படம் ரூபாய் 100 கோடி வசூலை குவித்துள்ள நிலையில், வெளிநாட்டிலும் படம் மிகப்பெரிய அளவு வசூலை குவித்து வருவதாக கூறப்படுகிறது. 

அள்ளப்போகும் வசூல்:

இன்றும், நாளையும் வார விடுமுறை என்பதால் தொடர்ந்து படத்திற்கு வசூல் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. 125 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியுள்ள காந்தாரா 1 எதிர்பார்த்ததை விட அதிக லாபத்தை தரும் என்று படக்குழு எதிர்பார்க்கிறது. கேஜிஎஃப் படத்தை தயாரித்த ஹோம்பலே ப்லிம்ஸ் நிறுவனமே காந்தாராவின் இரண்டு பாகத்தையும் தயாரித்துள்ளது. 

வரலாற்று காலத்தில் மன்னர் வம்சம், ஆன்மீகம் கலந்த கலவையாக இந்த படத்தின் திரைக்கதையை இயக்குனர் ரிஷப்ஷெட்டி எழுதியுள்ளார். ரிஷப் ஷெட்டி கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ருக்மிணி வசந்த் நடித்துள்ளார். இவர்களுடன் ஜெயராம், குல்ஷன் தேவையா, ப்ரமோத் ஷெட்டி, நவீன் டி பாட்டீல், ப்ரகாஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். 

ஓடிடி உரிமம் தொகை இ்த்தனை கோடியா?

அரவிந்த் காஷ்யப் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். சுரேஷ் மல்லையா எடிட்டிங் செய்துள்ளார். அஜனிஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார். தமிழ்நாட்டில் இந்த படத்தை திங் ஸ்டூடியோஸ், எம் மூவீஸ், பைவ் ஸ்டார் கே செந்தில் மற்றும் எஸ் பிக்சர்ஸ் விநியோகிக்கின்றனர். கேரளாவில் நடிகர் ப்ரித்விராஜ் நிறுவனம் காந்தாரா வெளியீட்டு உரிமையை கைப்பற்றியுள்ளனர். தெலுங்கு மொழியில் மைத்ரி மூவி மேக்கர்ஸ், கீதா ஆர்ட்ஸ், வராஹி சலானா சித்ரம், விக்னேஸ்வரா என்டர்டெயின்மெண்ட்ஸ், எஸ்வி சினிமாஸ் மற்றும் கேஎஸ்என் டெலிப்லிம் வெளியீட்டு உரிமையை கைப்பற்றியுள்ளனர்.

இந்த படத்தின் ஓடிடி உரிமை அமேசானில் மட்டும் ரூபாய் 125 கோடிக்கு வெளியிட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. படத்தின் கேமரா, படமாக்கிய விதம் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.