கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அமெரிக்காவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது அவரது ரசிகர்கள் மத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில வருடங்களுக்கு முன்புதான் சிவராஜ்குமாரின் அண்ணன் புனித் ராஜ்குமார் மாரடைப்பால் உயிரிழந்தார். இந்நிலையில் சிவராஜ்குமாருக்கு புற்று ஏற்பட்டிருப்பது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இவர்களின் தந்தை ராஜ்குமாரும் கன்னாவில் பிரபல நடிகர் ஆவார். 62 வயதாகும் சிவ ராஜ்குமார் சென்னையில் உள்ள அம்.ஜி.ஆர் கவர்ன்மெண்ட் ஃபிலிம் அண்ட் டெலிவிஷன் ட்ரைனிங் இன்ஸ்டியூட்டில் சினிமா தொடர்பான படிப்பை முடித்துவிட்டு தெலுங்கில் திரையுலகில் அடிடுத்து வைத்தார்.
சினிமா மீது இருந்த மோகத்தினால் 1947ஆம் ஆண்டு ஸ்ரீ சீனிவாச கல்யாணம் என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திறமாக நடித்தார். இதையடுத்து 1986ஆம் ஆண்டு ஆனந்த் என்ற படத்தின் மூலம் நடிகராக அவதாரம் எடுத்தார். முதல் படமே வெற்றிப்படமாக அமைந்தது. சிறந்த அறிமுக நாயகனுக்கான விருதை வாங்கினார். அதையடுத்து தெலுங்கிலும் அடியெடுத்து வைத்து ஆக்ஷன் நாயகனாக தன்னை நிலை நிறுத்திக்கொண்டார். சிவராஜ்குமார் கன்னடம் மட்டுமின்றி மற்ற மொழி படங்களிலும் ஆர்வம் காட்டி வருகிறார். தமிழில் கடைசியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படத்தில் சிறப்பு தொற்றத்தில் வந்து அசத்தினார். சிவராஜ்குமாரின் எண்ட்ரிக்கு தமிழ் ரசிகர்கள் ஆரவாரத்துடன் வரவேற்பு கொடுத்தனர்.
அதேபோல் தனுஷ் நடிப்பில் வெளியான கேப்டன் மில்லர் படத்திலும் சிறப்பு தோற்றத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். நடிகர் விஜயின் கடைசி படமான தளபதி 69 படத்திலும் சிவராஜ்குமார் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது.
இந்நிலையில்தான் சிவராஜ்குமாருக்கு புற்றுநோய் இருப்பதாகவும் அவருக்கு தீவிர சிகிச்சை தேவை இருப்பதால் அவர் அமெரிக்க சென்று சிகிச்சை பெற இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து சிவராஜ் குமார் கூறுகையில், “எனக்கு நோய் இருப்பது உண்மைதான். ஆனால் அது புற்று நோய் இல்லை. அதற்காக அமெரிக்கா சென்று சிகிச்சை பெற இருப்பதும் உண்மைதான். அந்த நோய் என்ன என்று இன்னும் கண்டறியப்படவில்லை.
விரைவில் நலம்பெற்று இந்தியா திரும்புவேன்” எனத் தெரிவித்திருந்தார். இதனிடையே தந்தை வழி சொத்துக்களை சிவராஜ்குமார் அனாதை ஆசிரமங்களுக்கு எழுதி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை.