தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நடிப்பில் உருவாகியுள்ள "அரபீ " கன்னட திரைப்படத்தின் டீசர் வெளியானது. 

Continues below advertisement


தமிழக பா.ஜ.க. தலைவராக பொறுப்பு வகித்து வருபவர் அண்ணாமலை. ஐ.பி.எஸ். அதிகாரியாக பொறுப்பு வகித்த அவர் கர்நாடகாவில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மூலம் மிகவும் பிரபலமானார். பின்னர், தனது பணியை ராஜினாமா செய்த அவர் தமிழக பா.ஜ.க.வில் இணைந்தார். இதையடுத்து, அவர் தமிழக பா.ஜ.க.வின் தலைவராக நியமிக்கப்பட்டார்.


ஆளுங்கட்சியான தி.மு.க.விற்கு எதிராக பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வரும் அண்ணாமலை தற்போது நடிகராக புது அவதாரம் எடுத்துள்ளார். கன்னடத்தில் உருவாகியுள்ள இந்த படம் விளையாட்டை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள திரைப்படம். இந்த படத்தில் இரு கைகளையும் இழந்த பாரா நீச்சல் வீரர் விஸ்வாஸ் நடித்துள்ளார்.



இரு கைகளையும் இழந்த விஸ்வாசிற்கு நீச்சல் பயிற்சி அளிக்கும் பயிற்சியாளராக அண்ணாமலை நடித்துள்ளார். தற்போது இந்த படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. 1. 28 நிமிடங்கள் ஓடும் இந்த டீசரில் அண்ணாமலை கம்பீரமான தோற்றத்தில் பயிற்சியாளராக களமிறங்கியுள்ளார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த படத்தில் அண்ணாமலையின் தோற்றம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ராஜ்குமார். ஆர் இந்த திரைப்படத்தை இயக்க, சேட்டன் சிஎஸ் இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளார். 


 

முன்னதாக, தமிழக அரசியலில் பரபரப்பாக காணப்படும் அண்ணாமலை திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பது பா.ஜ.க.வினர் உள்பட அரசியல் கட்சியினர் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

மேலும், அண்ணாமலை அவர் படப்பிடிப்பு தளத்தில் பங்கேற்ற புகைப்படமும் தற்போது வைரலாகி வருகிறது. சினிமாவில் இருந்துதான் அரசியலுக்கு செல்வார்கள். ஆனால், அண்ணாமலை அரசியலில் இருந்து சினிமாவிற்கு சென்றுள்ளார் என்று பலரும் இந்த டீசரை பார்த்து கருத்து தெரிவித்து வருகின்றனர். அண்ணாமலை நடித்துள்ள படத்தின் டீசருக்காக அவரது ஆதரவாளர்களும், பா.ஜ.க.வினரும் ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளனர்.



இந்த படத்திற்காக நடிகர் அண்ணாமலை ரூபாய் 1 மட்டும் ஊதியமாக பெற்றுக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண